| 4. பழமலையந்தாதி |
|
| |
வணங்கக் கரமு மொழியப் பழமலை மன்னுருவாய் இணங்கக் கரமு மிருப்பவைத் தேபுண ரேந்திழையார் பிணங்கக் கரமு ஞமலியும் போலவர் பின்றொடர்வீர் அணங்கக் கரமு தலைபோ லுமைப்பற்று மந்தகனே.
|
(35) |
| |
| |
அந்தரங் கங்கை தவரறி யாம லமுதருள்சம் பந்தரங் கங்கை வலிபோன்மின் னாக்கினர் பாடியுனைச் செந்தரங் கங்கை ரவமொண் கமலந் திரைத்துவருஞ் சுந்தரங் கங்கை விரும்புமுத் தாறுடைத் தொன்மலையே.
|
(36) |
| |
| |
மலங்கலை யங்கலை கற்றேன் றனக்கருள் வாழ்வளிபோன் கலங்கலை யங்கலை நல்லோர் பரவுங் கழலடியான் விலங்கலை யங்கலை வேலோன் பிதாமுது வெற்பிடத்திற் பொலங்கலை யங்கலை யான்மூடு மீனைப் புதைத்தவளே,
|
(37) |
| |
| |
புதைத்துக் கரக்கும் பொருளாளர் வெஞ்சொற் பொருமறலி கதைத்துக் கரக்குங் குமமுலை பாகன்மெய் கண்டடியார் பதைத்துக் கரக்குஞ் சிறிதா வுருகும் பழமலையான் வதைத்துக் கரக்குஞ் சரமீர்ந் தவன்றரும் வாழ்விலரே.
|
(38) |
| |
|
| |
35. கரம்-கை. மன்உருவாய்-நிலைபெற்ற திருவுருவாகி. இணங்கு அக்கரமும்-பொருந்தி நிற்கும் திருவைந்தெழுத்தும். பிணங்க-ஊட. கரமும் ஞமலியும் போல்-கழுதையையும் நாயையும் போல. அணங்க-வருந்த. கரமுதலை-ஆண்முதலை. அந்தகன்-நமன். 36. தரங்கம்-அலை. கைரவம்-அல்லி. கமலம்-தாமரை. சுந்தரம்-அழகைப்பார்த்து. தொன்மலை-பழமலை. கைவலிபோல்-கைவலி காட்டுவாரைப் போல. அங்கம்-எலும்பு. அமுது-ஞானப்பால். கைதவர்-வஞ்சகர். அந்தரங்கம் அருள்-மறைமுகமாக் கொடுத்தருளும். 37. ஐயம் கலங்கல் கலை நல்லோர்-ஐயம் மாறுபாட்டுணர்ச்சி ஆகியவைகளை ஒழித்த மெய்யறிவாளர்கள். விலங்கலை அலைவேலோன்-கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேற்படையை உடைய முருகன். மீனை-மீன்போன்ற கண்களை. மலங்கலை-மயங்காதே. பொலம் கலையம்-பொற்குடம். கலையால் மூடு-ஆடையால் மறைப்பாயாக. 38. கரக்கும்-ஏற்பவர்கட்குக் கொடாமல் மறைக்கும். பொருளாளர்-செல்வர். வெஞ்சொல்-கடுஞ்சொல். பொரும்-மோதுகின்ற. மறலி கதை துக்கர்-நமனுடைய கதைப்படையால் துன்பத்தையடையவர். அரக்கும் சிறிதா உக்கு உருகும்-அரக்கும் சிறிதாகுமாறு நெகிழ்ந்துருகுதற் கேதுவாகிய. ஈர்ந்தவன்-உரித்தவன்.
|
|
|
|