| 4. பழமலையந்தாதி |
|
| |
இலங்கு மரியு மருள்கோன் முதுவெற் பிடத்துரற்கால் விலங்கு மரியு முழலலெல் லாமுன்னி வெய்துயிராக் கலங்கு மரியு மிருந்துயர் கூருங் கலுழ்ந்திடுந்தாய்க் குலங்கு மரியு மொருவனும் போகுங் கொடுஞ்சுரத்தே.
|
(39) |
| |
| |
கொடுவரி யானை யடர்ந்துறு மாறெனக் கொண்டுயர்தூ ணொடுவரி யாநை யுறவடிப் போமென் றொருங்குவந்தே. அடுவரி யானை நிகர்நமன் றூத ரடிமுடிமன் நடுவரி யானை முதுகுன்றொ டேசு நரர்தமையே.
|
(40) |
| |
| |
நரகா வலர்மட வார்க்கள் ளுருகிக்கைந் நாவிருப்ப அரகா வலர்புனைந் துன்றனை யேத்தில ராய்ந்தறிவால் உரகா வலரென வுய்ந்தா ரினமுள முற்றகுன்றைப் புரகா வலரி லருட்கோயி லாகும் புராந்தகனே.
|
(41) |
| |
| |
புரந்தா னஞ்சு பழமலை வாணன் புலவர்தொழுந் துரந்தர னஞ்சு தலைநாக கங்கணன் றொண்டுறுமால் நிரந்தர நஞ்சு தொழுதேத்து தாதர்க்கு நேயமொடு வரந்தர நஞ்சு களத்துவைத் தானென்பர் மாதவரே.
|
(42) |
| |
| |
மாதரைக் கொன்றுவ ரம்மேனி வைத்தவ மாசுணத்தை ஈதரைக் கொன்று சிறுநாணென் றார்க்கு மெழிலுடையாய் நீதரைக் கொன்று நலஞ்செயல் வேண்டு நினையிகழும் வாதரைக் கொன்று முதுகுன்ற மாநகர் மாசொழித்தே.
|
(43) |
| |
|
| |
39. அரி-திருமால். மருள் கோன்-மயங்கா நின்ற இறைவன். உரல் கால் விலங்கு-யானை. அரி-சிங்கம். உழலல்-திரிதல். வெய்து உயிரா-பெருமூச்சுவிட்டு. மரியும் இருந்துயர்கூரும்-இறத்தற்கேதுவாகிய மிகுந்த துன்பத்தையடையும். கலுழ்ந்திடும்-கண்ணீர்விட்டழும். 40. கொடு வரி-புலி. ஆன்-பசு. அடர்ந்துறும் ஆறுஎன-நெருங்கிப் பிடித்துக்கொண்டு போவதைப் போல. வரியா-பிணித்து. அடுவர்-கொல்லுவார்கள். அரியானை-அறிதற்கரியவனை. ஏசும் நரர்-இகழும் மனிதர்கள். 41. நரகு ஆவலர்-நிரயத்தில் விருப்பம் உடையவர். காஅலர்புனைந்து-பொழிலில்உள்ள மலர்களைச்சூடி. அரஏத்திலர்-சிவனே என்று போற்றவில்லை. ஆய்ந்த அறிவு-ஆராய்ச்சி செய்த நல்லறிவு. உரகா-பாம்பணியை உடையவனே! அலர்-விளங்குவாயாக ! இனம் உளம்-மெய்யறிவாளரின் உள்ளத்தில். குன்றைப்புர-பழமலைநாதரே! 42. புரந்தரன்-இந்திரன். துரந்தரன்-சுத்தவீரன். தொண்டு உறும்மால்-தொண்டு பூண்டொழுகுந் திருமால். நிரந்தரம்-எப்பொழுதும். நஞ்சு-மனமுருகி. தாதர்-அடியவர். களத்து-கழுத்தில். 43. மாதரை கொன்துவர் அம்மேனிவைத்தவ-கங்கை உமை என்னுந் தேவிமார்களைப் பெருமை தங்கிய பவளம் போலும் அழகிய திருமேனியில் வைத்தவரே! அரை-இடை. மாசுணத்தை ஆர்க்கும்-பாம்பைக்கட்டும். வாதர்-வாதம்புரியுந் தீயோர். மாசு-குற்றம். தரை-உலகம். ஒன்றுநலம்-ஒருநன்னெறியை.
|
|
|
|