| 4. பழமலையந்தாதி |
|
| |
செய்க்குத் தனங்க மலமலர் சீர்தருஞ் செய்யதிரு மெய்க்குத் தனங்க டரவடு வாங்கிதொல் வெற்பிடத்திற் கைக்குத் தனங்க வொழியினுந் தாடனைக் காய்வதிலேன் வைக்குத் தனங்க ளழித்திறை யாதிந்த வையகமே.
|
(50) |
| |
| |
வைத்து மதிக்கு மருங்கிற்கைத் தாயென மந்தரமத் துய்த்து மதிக்கு மனையின்மை யான்மறை யோதிமமுன் எய்த்து மதிக்கு முடிமிசைக் கங்கையை யேத்தினேயோ மெய்த்து மதிக்கு மணுகவொண் ணாமுது வெற்பினனே.
|
(51) |
| |
| |
வெற்புக் குமைய வடிவே லெறிந்தசெவ் வேண்மதவேள் பொற்புக் குமையவ னோடரன் வாழ்முது பூதரத்தி னிற்புக் குமையவ ளொத்திருந் தாள்குறை வின்றிவளர் கற்புக் குமையவள் போலுநுங் காதற் கருங்கண்ணியே.
|
(52) |
| |
| |
கருந்தடங் கட்கு முதவாய் மயிலெங்கள் கண்களுக்கு விருந்தடங் கட்கு நலமெனப் போந்தவிண் மீன்பொரியும் அருந்தடங் கட்கு வளையோடை யாகுக வம்புயங்கள் பெருந்தடங் கட்கு முகமாகுங் குன்றைப் பெருந்தகையே.
|
(53) |
| |
| |
பெருமு தலைவளை யான்போற்றுங் குன்றைப் பெருந்தகையை இருமு தலைவளை மூப்படைந் தாண்டவற் கின்மகவைக் கருமு தலைவளை வாயிற்றந் தானைமுன் கண்டழுது பொருமு தலைவளை நீத்தனன் மேவினள் பூங்கொடியே.
|
(54) |
| |
|
| |
50. செய்-கழனி தொல் வெற்பு-பழமலை. வைக்கு-இகழ்ச்சிக்கு. இறையாது-வீணே அழித்துச் செலவிடார். 51. கைத்தாய்-வளர்க்குந்தாய். மந்தர மத்து உய்த்து-மந்தரமலையாகிய மத்தைச் செலுத்தி. ஓதிமம்-நான்முகனாகிய அன்னம். எய்த்து மதிக்கும்-இளைத்துத் துணிந்த. மெய்த்துமதிக்கும்-உண்மையறிவுக்கும். 52. வெற்புகுமைய-கிரௌஞ்சமலை தூளாக. மதவேள்-காமன். பொற்புஉக்கும்-அழகைக் கெடுக்கும். முதுபூதரம்-பழமலை. கண்ணி-கண்ணையுடைபவள். 53. குமுதம்-செவ்வாம்பல். விருந்தள்-விருந்தாக இருப்பவள். பொரியும்-பொரிந்து உதிரும். குவளை-கருங்குவளை. அம்புயங்கள்-தாமரைமலர்கள். 54. பெருமுதலை-பெரிய முழு முதற்கடவுளை. வளையான்-சங்கையுடைய திருமால். இருமு-இருமுதல் மேலிட்டு. தலைவளை-தலைவளைகின்ற. இல்மகவை-இறந்துபோன புதல்வனை. பொருமுதல்-தேம்புதல். இது நற்றாயிரங்கல்.
|
|
|
|