| 4. பழமலையந்தாதி |
|
| |
பூங்குமி ழும்படி முள்ளும் பொருந்திப் புளிஞர்பொருள் வாங்குமி ழும்படி மோது மெனல்கொடு மால்விழுங்கி ஆங்குமி ழும்படி வந்தவெம் பாலை யடைந்தவள்கால் வேங்குமி ழும்படி னென்னாம் பழமலை வித்தகனே.
|
(55) |
| |
| |
வித்துரு மத்தை நிகர்வா னுயிர்செய் வினையருத்துங் கத்துரு மத்தை யிடுதயிர் போலக் கலக்குமதன் சத்துரு மத்தை வனைமுது குன்றிறை தாள்கொடுவான் நத்துரு மத்தை யிலவாக வெள்ளுவர் நற்றவரே.
|
(56) |
| |
| |
நற்றவ ராக மறையவ ராகவிந் நானிலத்தில் அற்றவ ராக மனமுடை யார்க்கன்றி யச்சமற உற்றவ ராக மறியா தொளித்தநின் னொண்பதங்கள் பற்றவ ராகம லாலயன் போற்றும் பழமலையே.
|
(57) |
| |
| |
பழங்க விகட மகமந்திக் கீபொழிற் பண்டைமறை முழங்க விகட வுளர்க்கீயுங் குன்றை முதல்வனைவேள் அழங்க விகட விழிதிறந் தானை யடிபரவார் கிழங்க விகட மறவரிற் றோன்றிக் கெடுவர்களே.
|
(58) |
| |
| |
கெடுத்துப் பணியு முடையும்வெள் காமற் கிழத்திமுலை வடுத்துப் பணியு முரம்வேட்டு நின்றனள் வல்லியதள் உடுத்துப் பணியு மரைக்கசைத் தோய்தொண்ட ருள்ளமெல்லாங் கொடுத்துப் பணியு மலர்த்தாட் டிருமுது குன்றத்தனே.
|
(59) |
| |
|
| |
55. குமிழ்-குமிழஞ்செடி. புளிஞர்-வேடர்கள். இழும்படி-வழுக்கி விழுமாறு. மால்-திருமால். திருமாலும் இப்பாலை நிலத்தின் வெப்பத்தை நோக்கியே உமிழ்ந்தனர் என்பது கருத்து. 56. வித்துருமம்-பவளம். கத்துரு-தலைவர். மத்தைவனை-ஊமத்தம் பூவைச் சூடிய. வானத் துருமம்-விண்ணுலகத்திலுள்ள கற்பக மரச்சோலை. இல ஆக-நிலையற்றதாக. 57. நல்தவர்-நல்ல தவத்தையுடையவர். அராகம்-மூவித ஏடணைகள். பற்றவரா-கிட்டுதற்கரியனவாம். 58. கவிகள்-குரங்குகள். மக-மகவுக்கும். மந்தி-பெண் குரங்குகள். அவி-தேவருணவு. வேள் அழங்க-காமனழியுமாறு. விகடம் விழி-மாறுபட்ட கண். கடம்-காடு. மறவர் இல்-வேடர் குடி. 59. பணி-அணிகலன். கெடுத்து-போக்கி விட்டு. வெள்காமல்-நாணாமல். கிழத்தி-உமாதேவி. துப்புஉரம்-பவழம் போன்ற மார்பு. அதள்-புலித்தோல். பணியும் அசைத்தோய்-பாம்பையுங் கட்டியவரே.
|
|
|
|