| 4. பழமலையந்தாதி |
|
| |
குன்றுக ளுங்களை யொவ்வா வெனுமுலை குன்றதிர்க்குஞ் சென்றுக ளுங்களை யுண்வண்டு மோவில் செழுங்கொன்றைமான் கன்றுக ளுங்களை நன்மதி வேணிக் கடவுடனை யென்றுக ளுங்களை யெம்மானைக் குன்றை யிறைவனையே.
|
(60) |
| |
| |
இறவாத வாநந்த வெள்ளத் தழுத்தி யெனையருளால் துறவாத வாநந்த வாள்வதென் றோமெய்த் துறவர்தொழும் அறவாத வாநந்த னஞ்சூழ் முதுகுன் றடைந்தவர்தம் உறவாத வாநந்த கோபால னென்றற் குடையவனே.
|
(61) |
| |
| |
உடைய மடங்க லுதைத்தபொற் பாத வொளிசெய்மழுப் படைய மடங்கன் முகற்காய்ந்த வீர பழமலையாய் கடைய மடங்கல் லொடுபக லுந்தொழக் கற்றலமெம் விடைய மடங்கல் வருவதெஞ் ஞான்று விளம்பகவே.
|
(62) |
| |
| |
விளங்க வலம்புரி மால்போற்று நன்முது வெற்பகஞ்சேர்ந் துளங்க வலம்புரி யாய்மாய் பிறிதொ ருடம்படையாய் துளங்க வலம்புரி மென்குழன் மாதர்க்குச் சூழ்ந்துநின்று களங்க வலம்புரி யிவ்வெற்பை யேநிலை கைவருமே.
|
(63) |
| |
| |
வருந்தா தவரை வளைத்திட் டவபவ வன்பிணிக்கு மருந்தா தவரை மருவும் பழமலை வாணவுனைப் பொருந்தா தவரை யுயிர்செகுத் துண்ணம் புலிமழுங்கத் திருந்தா தவரை வரக்கூ வுறாததென் சேவல்களே.
|
(64) |
| |
|
| |
60. அதிர்க்கும்-ஆரவாரிக்கும். ஓவுஇல்-நீக்க மில்லாத. உகளும்-துள்ளிப் பாயும். துகளும்-குற்றத்தையும். 61. இறவாத-கெடாத. அவாநந்த-அவாக் கெடுமாறு. அறவா-அறவடிவினனே! தவாநந்தனம்-அழிவில்லாத பூஞ்சோலை. உறவா-உறவாக விருப்பவரே. 62. மடங்கல்-சிங்கத்தைப் போன்ற நமன். உடைய-ஆற்றல் கெட. மடங்கல் முகன் காய்ந்த வீர-திருமாலாகிய நரசிங்கத்தைப் பிளந்த வீரமுடையவரே! கடையம்-கடையேமாகிய யாம். மடங்கு-மாறி மாறி வருகின்ற. விடையம் அடங்கல்-பொறியடங்கல். 63. வலம்புரி மால்-வலம்புரிச் சங்கையுடைய திருமால். முதுவெற்பகம்-பழமலையிடம். மாய்-இறந்தொழியும். பிறிது ஒரு உடம்பு-வேறோர் உடல். நிலை-வீடுபேற்று நிலை. துளங்க-ஒளிவிட. களங்க அலம் புரி-துன்பத்திற்கேதுவாகிய செயல்களையே செய்கின்ற. உள்-மனம். 64. வரை-மேருமலை. பவவன் பிணி-பிறவியாகிய வலிய நோய். மருந்தா-மருந்தானவரே! தவரை-தவஞ்செய்பவர்களை. உயிர் செகுத்து-உயிரைக் கொன்று. அம்புலி-திங்கள். ஆதவர்-கதிரவர்.
|
|
|
|