| 4. பழமலையந்தாதி |
|
| |
மெல்ல வணங்கு நினைவா லெதிர்ந்திட வேனெடுங்கண் நல்ல வணங்கு வளையுடை யோடு நடந்திலைநீ கொல்ல வணங்கு மதிசுமந் தேநின்ற கொள்கையென்னோ வெல்ல வணங்கு மலையாய் முதுகிரி வேதியனே.
|
(70) |
| |
| |
வேதிய வாவி தனக்காவி யாகிய வித்தகப்பெண் பாதிய வாவி மலர்த்தேன் பெருகும் பழமலைவாழ் சோதிய வாவி வருவிடைப் பாகநின் றொண்டருறு நீதிய வாவி யவரையென் றோசென்று நேர்குவனே.
|
(71) |
| |
| |
நேரு மடியர் தமக்குற வாயவர் நேசமறச் சோரு மடியர் தமையணு காதவர் தும்பியினாற் சாரு மடியர் மணிநிற வண்ணன் றரையிடந்து தேரு மடியர் முதுகுன்ற வாணுதற் றீக்கண்ணரே.
|
(72) |
| |
| |
கண்டீர வந்தனை நேர்ந்தாங் கருகக் களிற்றினைமுன் கொண்டீர வந்தனை வானேர் செயுமுது குன்றனெடு வண்டீர வந்தனை நேர்வாளைக் கோலம் மதனனெய்யும் புண்டீர வந்தனை சேர்தியென் றோதுமின் போமின்களே.
|
(73) |
| |
| |
போதுமின் மாலை வகைவகை யாகவம் பொற்றொடியீர் ஓதுமின் மாலை தரின்வம்மி னில்லையென் றோட்டினரேல் மாதுமின் மாலை வருமுனஞ் சாமென்று வண்கைமலர் மோதுமின் மாலை மகிழ்குன்றை வாணர்தம் முன்னடைந்தே.
|
(74) |
| |
|
| |
70. வேல்நெடுங்கண்-வேலைப் போன்ற நீண்ட கண்களையுடைய பெண். வளை-வளையல். உடை-ஆடை. 71. பெண்பாதிய-உமாதேவியைப் பாதியுடலில் உடையவனே! வாவி-தடாகம். சோதிய-ஒளிவடிவரே. வாவிவரு-தாவிச்செல்லும். நீதி-ஒழுக்கங்கள். 72. நேரும்-அன்போடடையும். தும்பி-யானை. மடியர்-ஆடையை உடையவர். மணிநிற வண்ணன்-திருமால். இடந்து-தோண்டி. 73. கண்டீரவம்-சிங்கம். ஈர-தோலை உரிக்க. வந்தனை-வணக்கம். கோல்புண்-கணையினால் உண்டாகிய புண். அவம்தனை நேர்வாளை-சுகத்தையிழந்து கிடக்கும் எங்களுடைய தலைவியை. 74. போதுமின்-போங்கள். வம்மின்-வாருங்கள். ஒட்டினரேல்-துரத்துவாரானால். கைமலர் மோதுமின்-கைகளால் அறைந்து கொள்ளுங்கள். மாலை மகிழ்-திருமாலை மகிழ்ந்து அடிமை கொண்ட.
|
|
|
|