4. பழமலையந்தாதி |
|
|
தேவியு மானும் விளையா டிடமுடைச் செங்கணுதல் ஆவியு மானும் வருஞ்சீர் முதுகுன் றணிவிழவைக் காவியு மானும் விழியாய்கண் டெய்தெனக் கண்மறுகின் ஏவியு மானும் மகட்கிடர் நீர்செய்தி ரேழையரே.
|
(96) |
|
|
ஏடலை யாறு கிழித்தெதி ரேறவிண் ணேறுபுகழ்க் கூடலை யாறு புலியூர் மகிழ்முது குன்றர்பெற்ற வேடலை யாறு முயிர்த்தெடுத் தேந்துபு மென்கைகொடுத் தூடலையாறு வருகவென் பார்நல் லுமைதனையே.
|
(97) |
|
|
உமையிடப் பாக னலங்கூர் முதுகுன் றுடையனராச் சுமையிடப் பாக வரிதே டடியுறத் தூமலர்கள் தமையிடப் பாக மருவுவ ரேலவர் தங்களைப்பா ரமையிடப் பாக னணுகா னுதைநினைந் தஞ்சுவனே.
|
(98) |
|
|
அஞ்சு வணத்தை வரன்முறை யோத வரக்கெறிந்த பஞ்சு வணத்தை மருவுமென் றாளுமை பாகமொடு செஞ்சு வணத்தை யனையநின் கோலமென் சிந்தையுற விஞ்சு வணத்தை மகிழ்குன்றை வாண விரும்புவனே.
|
(99) |
|
|
விருத்தா சலசங் கராமலை மாது விழிகளிக்கும் நிருத்தா சலசந் திரன்போ லுடம்பிடை நின்றவர்தங் கருத்தா சலசம் பவமிலர்க் காண்டறங் காட்டியசொற் றிருத்தா சலசந் தமியேன் றலைக்குன் றிருவடியே.
|
(100) |
|
|
|
96. நுதல் செங்கண் ஆவி-நெற்றியிற் சிறந்த கண்ணையுடைய சிவபெருமானுடைய உயிரைப் போன்ற இறைவி. மறுகு-தெரு. 97. அலை ஆறு-அலை பொருந்திய வைகை. விண்ஏறு-விண்ணுலகம் வரை ஏறிய. உயிர்த்து-உச்சி மோந்து. ஊடலைஆறு-ஊடலைத்தணி. 98. அராச்சுமை இடப்பு ஆக-ஆதிசேடனுக்குச் சுமையாகிய இந்நிலவுலகமானது பிளவுபட. பாகம் மருவுவரேல்-பரிபக்குவத்தை அடைவார்களானால். மையிடப்பாகன்-எருமைக் கடாவைச் செலுத்தும் நமன். உதை-முன்பு கிடைத்த காலுதை. 99. அஞ்சுவணத்தை-திருவைந்தெழுத்தை. அரக்கு எறிந்த-செந்நிறத்தை வீசகிற. 100. சங்கரா-சுகஞ்செய்பவரே! சல சந்திரன் போல் உடம்பிடை நின்றவர்-மெய்யறி வாளர்கள். சலசம்பவம் இலர்க்கு-பொய்யாகிய பிறவியை ஒழித்த சனகாதி முனிவர்களுக்கு.
|
|
|
|