5. பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை |
|
|
[பிச்சா அடனம் : பிச்சா-பிச்சை, அடனம்-ஏற்றல். நவமணிமாலையாவது ஒன்பது வகை மணிகளைப் போன்ற உயர்ந்த செய்யுட்களால் செய்யப் பெறுவது. இஃது எண்ணாற் பெற்ற பெயர். ஒன்பது வகையான செய்யுட்களாற் பாடுவதும் உண்டு. முன்னாளில் சிவபெருமான் தாருகாவன முனிவர்களின் தருக்கையடக்கும் பொருட்டு ஆடையற்ற திருக்கோலத்துடன் அவர்தம் மனைக்குப் பிச்சை யேற்கச் சென்று அவர்தம் மனைவியர் கற்பைக் குலைத்து முனிவர்களின் தருக்கையடக்கினார் என்பது புராணக் கூற்று, அதனை அடிப்படையாக வைத்து இந்நாளில் நடைபெறும் பிச்சாண்டவர் விழாவைக் கண்ட அடிகளார் இப் பாடல்களைப் பாடினர். இதனில் இடக்கரடக்கல்கள் உள்ளன.] |
|
|
|
|
நங்குற்றந் தீர்க்கும் பழமலை நாதர்க்கு நற்பலிகொண் டங்குற்று மென்றுகில் போக்கினள் வெற்றரை யாகியந்தோ இங்குற் றனையென வெம்பெரு மானிவ் விருநிலத்திற் றங்குற்றம் பார்க்கு மவருள ரோவெனத் தாழ்ந்தனளே.
|
(1) |
|
|
குன்றா முதுகுன் றுடையா னிலாதவெண் கோவணத்தான் தன்றா மரைக்கை விரன்மூன்று காட்டித் தனங்குறித்து நன்றாக வித்தனை பிச்சையுண் டோசொன் னறுநுதலாய் என்றா னிரண்டத் தனையுள கோடியென் றிட்டனளே,
|
(2) |
|
|
இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னைமுனந் தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலாள் செப்பார் பணைமுலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டாய் எப்பாத் திரத்தலு மிட்டறி யாய்கொன்முன் னென்றனரே.
|
(3) |
|
|
|
1. நற்பலி-நல்ல பிச்சை. மென்துகில்-மெல்லிய ஆடை. வெற்றரை-ஆடையில்லாத அரை. தாழ்ந்தனள்-விடையின்மையிற் கீழ்ப்பட்டாள். தோற்றவர் வென்றவரை வணங்குதல் இயல்பாகலின் வணங்கினாள். தனக்கும் வெற்றவரை யென்பதுணர்ந்து தலைகுனிந்தாள். பிச்சாடனரைப் பிரிய மனமின்றித் தங்கினாள். தாழ்தல்-கீழ்ப்படுதல். வணங்குதல், குனிதல், தங்குதல். 2. குன்றா முதுகுன்றுடையான்-எக்காலத்தினுங் குறைவுபடாத பழமலைநாதர்: குன்றாகிய பழமலைநாதர்; அருள் குன்றாதவனுமாம். வளங்குன்றாத முதுகுன்றுமாம். இலாத வெண் கோவணத்தான் என்பது ஆடையற்றவன் என்னும் பொருளைத் தருவதாய் “கழிந்த பற்றுடை வசிட்டன்” என்றாற்போல நின்றது. இரண்டத்தனை சிறுமையைக் குறித்தற்குக் கூறும் எண்ணளவை; இரண்டாகிய அவ்வளவு. கோடி-கொள், புதிது. என்றிட்டாள்-ஒரு சொல். 3. எப்பாத்திரம்-சற்பாத்திரம், அசற்பாத்திரம், பிட்சபாத்திரம் முதலியன. தப்பா-தவறாத. பலிகொண்டு-பிச்சையேற்று. செப்புஆர்-செப்புக் கிண்ணம் போன்ற. பணை-பருத்த.
|
|
|
|