7. பெரியநாயகியம்மை கலித்துறை |
|
|
[கலித்துறை யென்னும் பாடலாற் பெரியநாகியம்மை மீது பாடப்பெற்றமையின் இது ‘பெரியநாயகியம்மை கலித்துறை’ என்று பெயர் பெற்றது. இதனிற் பத்தொன்பது கலித்துறைப் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்கள்யாவும் இறைவியின் பெருமையை இனிது விளம்புவனவாக இலங்குகின்றன.] |
|
|
|
|
இறைவற்கு தக்க விறுமாப் பெனுமொழி யின்றியொரு மறுவற்ற தன்மனை யாட்கேற்ற தாமிறு மாப்பனெனக் குறைவற்ற நெற்கொண் டுலகேற் றுனைப்பலி கொள்ளுமரன் பெறவுற் றனையனை யேகுன்றை வாழும் பெரியம்மையே.
|
(1) |
|
|
|
1. மறு-குற்றம். இறுமாப்பு-தருக்கியிருத்தல்.
|
|
|
|