பட்டப் பகற்பொழுதை இருளென்ற மருளர்தம் | பட்சமோ எனதுபட்சம் | பார்த்தவிட மெங்கணுங் கோத்தநிலை குலையாது | பரமவெளி யாகவொருசொல் | திட்டமுடன் மௌனியா யருள்செய் திருக்கவுஞ் | சேராமல் ஆராகநான் | சிறுவீடு கட்டியதின் அடுசோற்றை யுண்டுண்டு | தேக்குசிறி யார்கள்போல | நட்டனைய தாக்கற்ற கல்வியும் விவேகமும் | நன்னிலய மாகவுன்னி | நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே | நடுவே முளைத்தமனதைக் | கட்டஅறி யாமலே வாடினே னெப்போது | கருணைக் குரித்தாவனோ | கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு | கருணா கரக்கடவுளே. |