பையப்பைய வெளிப்பட்டுக் கலந்தருள வருஉம், நன்மையெல்லாம் நாளும் வளமுறப் பயந்தருளும் சுற்றமாம் நல்லுறவே!
"கருதரிய . . . கடவுளே" -
(வி - ம்) 'துள்ளுமறியா மனம்' - துள்ளும் அறியா மனமெனவும், துள்ளும் மறியா மனம் எனவுங் கோடற்கியைந்தது. மறியெனக் கொள்ளுங்கால் ஆட்டுக்குட்டி எனக் கொள்க. துரியம் - நனவு, கனவு, உறக்கம் மூன்றுங் கடந்த பேருறக்க நிலை. தெவிட்டுதல் - வெறுப்புக் கொள்ளுதல்.
பூசை - உடம்பாலும், உரையாலும், உள்ளத்தாலும் என மூவகையாகச் செய்யப்படும். அவற்றுள் இஃது உள்ளத்தாற் செய்யப்படும் உயர்வழிபாடாகும்.
சிறப்பிலா இறப்பினை எய்தி ஆவிகளாய் அல்லலுறுத்தும் அலகைகட்கு அறிவிலாக் கீழோர் உயிர்ப்பலியிடுவர். அத் தீச்செயலை நல்லறிவுடையோர் நாளும் கடிவர். உயிர்க்கொலை வேள்வியும் செயிர்சார் தீச்செயலேயாம். தக்கன் வேள்வி மிக்க தீமையும் இக்கொள்கையுடைத்தே.
மனக்கோயில் வழிபாட்டினை வருமாறுணர்க :
| "காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக |
| வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக |
| நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப் |
| பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே." |
| - 4. 79 - 4. |
| "மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி |
| யுறவாதி தனையுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி |
| இறவாத ஆனந்த மெனுந்திருமஞ் சனமாட்டி |
| அறவாணர்க் கன்பென்னும் அமுதமைத்தர்ச் சனைசெய்வார்." |
| - 12. வாயிலார், 8. |
மனவொடுக்கமே பலியென்ப, உயிர்ப்பு. வெளுமையாம். புகை நிறம் அதனால் நறுமணப் புகைக்கொப்பாம் அறிவு சுடர்வண்ணம் அதனால் தீபவொப்பாம்.
(8)
உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள் | ஊற்றென வெதும்பியூற்ற | ஊசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே | ஓருறவும் உன்னியுன்னிப் | படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப் | பாடியா டிக்குதித்துப் | பனிமதி முகத்திலே நிலவனைய புன்னகை | பரப்பியார்த் தார்த்தெழுந்து |