இங்கற்ற படியங்கு மெனவறியு நல்லறிஞர் | எக்காலமும் உதவுவார் | இன்சொல்தவ றார்பொய்மை யாமிழுக் குரையார் | இரங்குவார் கொலைகள்பயிலார் | சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை | சாட்சிநீ யிகபரத்துஞ் | சந்தான கற்பகத் தேவா யிருந்தே | சமத்தஇன் பமும்உதவுவாய் | சிங்கத்தை யொத்தெனைப் பாயவரு வினையினைச் | சேதிக்க வருசிம்புளே | சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுவே | தீனனேன் கரையேறவே | கங்கற்ற பேராசை வெள்ளத்தின் வளரருட் | ககனவட் டக்கப்பலே | கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு | கருணா கரக்கடவுளே. |