பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


150


சந்தை - அங்காடி. திரம் - உறுதி. தாமத சாத்துவிகம், இராசதம், என்ற முக்குணங்களுள் தாமதம் ஒன்று.

    முக்குணங்களையும் முறையே அறிவுப்பண்பு, ஆட்சிப்பண்பு, அழுந்தற்பண்பு எனக் கூறுப.

    அறுசமயங்கள்தோறும் பயனளிக்கும் ஆண்டவன் ஒருவனே என்னும் உண்மை வருமாறு :

"தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
    தாமரையான் நான்முகனுந் தானே யாகி
 மிக்கதொரு தீவளிநீ ராகா சமாய்
    மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை
 அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
    கங்கங்கே யறுசமய மாகிநின்ற
 திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
    தீவினையேன் அறியாதே திகைத்த வாறே." -
6. 68 - 5
     "சீறுபுலிபோற்சீறி . . . சிவக்கவறிவார்" என்றதற்குச் சிவயோகியர் போன்று உயிர்ப்பை நிறுத்துங் குறியாகக் கண்ணைச் சிவந்து காட்டி யென்றலுமொன்று.

(3)
 
காயிலை யுதிர்ந்தகனி சருகுபுனல் மண்டிய
 
    கடும்பசி தனக்கடைத்துங்
 
  கார்வரையின் முழையிற் கருங்கல்போ லசையாது
 
    கண்மூடி நெடிதிருந்தும்
 
தீயினிடை வைகியுங் தோயமதில் மூழ்கியுந்
 
    தேகங்கள் என்பெலும்பாய்த்
 
  தெரியநின் றுஞ்சென்னி மயிர்கள்கூ டாக்குருவி
 
    தெற்றவெயி லூடிருந்தும்
 
வாயுவை யடக்கியு மனதினை யடக்கியு
 
    மௌனத்தி லேயிருந்தும்
 
  மதிமண்ட லத்திலே கனல்செல்ல அமுதுண்டு
 
    வனமூடி ருந்தும் அறிஞர்
 
ஆயுமறை முடிவான அருள்நாடி னாரடிமை
 
    அகிலத்தை நாடல்முறையோ
 
  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
 
    ஆனந்த மானபரமே.