பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

307
"நமக்கும் அன்பிற் பெருகியசிறப்பின் மிக்க, அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச், சொற்றமிழ்பாடு கென்றார்."(12. தடுத்தாட், 70.)

"கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
    கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
 சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
    சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
 பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
    பன்னிய நூற் றமிழ்மாலை பாடு வித்தென்
 சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே."
- 6. 84 - 4.
"தண்மல ரும்பொழிற் றென்கம லேசர்க்குச் சாத்துகின்ற
 ஒண்மலர் சொன்மலர்க் கொவ்வாது போலுமற் றோர்புலவன்
 பண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால்சிவந்த
 கண்மலர் சாத்தியுங் காண்பரி தான கழன்மலரே."
- குமரகுருபரர், திருவாரூர் நான்மணி. 31.
     பணிகொண்ட புலவர் - நம்பியாரூரர், பணி பரவையார்பால் தூது போதல். சொன்மாலைச்சிறப்பு: 1. சிவமணம் கமழும், 2. வாடாது, பாடுதல் செய்யும், 3. அன்பால் உருகும், 4. என்றும்புதுமாலை அடியார்பால் அன்பும், அடிமையும், பத்திமையும், பணியும் உரிமையாகவுள்ளன. இவற்றுடன் காதன்மைப்பண்பும் உண்டு. பூமாலைக்கு: மணமறல், வாடல், தேன்பிலிற்றாமை முதலிய குறைகளுண்டு.

(1)
 
கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன்
    கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க
ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும்
    ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ
இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும்
    இடர்செயுமைம் புலனுங்கா மாதி யாறும்
வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான
    மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே.
     (பொ - ள்) "கருணைமொழி . . . பெற்றறியேன்" - அடியேன் பால் இனியமொழி சிறிதுமில்லை; யான் இம்மியளவும் ஈதல் செய்கின்றவனுமல்லேன். எளியேன் உள்ளக்கருத்துக்குப் பொருந்த ஒரு

 
 1. 
'பூம்படி'. 4. 103-3.