பொழுதேனும் அன்பு மேலீட்டால் கண்ணீர் வார்தலும் உடல் நடுங்கலும் உற்றறியேன்.
"என்னை . . . எதிர்த்த" - அடியேனை ஆட்கொண்டருளும் ஒப்பில்லாதமுதல்வனே! எளியனும் தனியனுமாகிய ஒருவனாம் எனக்கு இருவினையும், முக்குணமும், நான்கு கரணமும், துன்பத்தொடக்கினைவிடாது செய்து வரும் ஐம்புலன்களும், காமம் முதலாகச் சொல்லப்படும் ஆறுபகையும், வரவரவும், அறிவிலியாகிய எளியேனுக்கு எட்டு மதங்களும் மட்டின்றி வந்து எதிர்த்தன.
(வி - ம்.) இருவினை - நல்வினை, தீவினை. முக்குணம்: அமைதி ஆட்சி, அழுந்தல். கரணம் நான்கு: நாட்டம், மனம், எழுச்சி, இறுப்பு. ஐம்புலன்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். காமாதி ஆறு: செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை. மதம் எட்டு: குலம், உருவம், இளமை, கல்வி, செல்வம், தற்பெருமை, உதவி, இயல்பு, (இவற்றால் தனக்கு நிகராவார் எவரும் இலரெனத் தன்னையே மதித்துச் செருக்குறுதல்.) அமைதி - சாத்துவிகம், ஆட்சி - இராசதம். அழுந்தல் - தாமதம். நாட்டம் - சிந்தை. எழுச்சி - ஆங்காரம். இறுப்பு - புத்தி. அகப்பகை ஆறு : காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்.
"நவ . . . வடிவமன்றே" - (தில்லைத் திருச்சிற்றம்பலம் சிவனார் நடிக்கும் திருவருட்பரவெளி), சிவபெருமான் உலகுய்ய உள்ளத்தால் உஞற்றியருளும் திருக்கூத்துத் திருவடிவம் ஒன்பது வகையாகும். அதற்கு இடம் பொன்னம்பலமாகும். வடிவம் ஒன்பது: 1. அத்தன் 2. அன்னை 3. ஓசை 4. எழுத்து 5. அருளோன் 6. ஆசான் 7. அரன் 8. அரி, 9. அயன்) (சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசுரம், அரன், அரி, அயன்) இவ்வுண்மை வருமாறு :
| "சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் |
| உவந்தருள் உருத்தி ரன்தான் மாலயன் ஒன்றின் ஒன்றாய்ப் |
| பவந்தரும் அருவம் நாலிங் குருவநால் உபயம் ஒன்றா |
| நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்." |
| - சிவஞானசித்தியார், 2. 4 - 2. |
(2)
வடிவனைத்துந் தந்தவடி வில்லாச் சுத்த | வான்பொருளே எளியனேன் மனமா மாயைக் | குடிகெடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மோன | குருவேஎன் தெய்வமே கோதி லாத | படியெனக்கா னந்தவெள்ளம் வந்து தேக்கும் | படியெனக்குன் திருக்கருணை பற்று மாறே | அடியெடுத்தென் முடியிலின்னம் வைக்க வேண்டும் | அடிமுடியொன் றில்லாத அகண்ட வாழ்வே. |