திருவடி நிழலைத் திருவருளால் உணர்வினுள் உணர்வாய்க் கண்டாலன்றி எளியேனை மயக்கும் உலக மாயை என்னும் கடுங்கோடை நீங்குவதற்கு 1 வேறு வழியில்லை.
(8)
நீங்கா துயிருக் குயிராகி நின்ற நினையறிந்தே | தூங்காமல் தூங்கின்அல் லாதே எனக்குச் சுகமும்உண்டோ | ஓங்கார மாம்ஐந் தெழுத்தாற் புவனத்தை உண்டுபண்ணிப் | பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே. |
(பொ - ள்.) ஓங்காரம் என்று சொல்லப்படும் ஒலியாகிய நாதமும், எழுத்தாகிய விந்துவும், அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றுங் கூடி ஐந்தெழுத்தாகும். இவ்வைந்தெழுத்தால் உலகங்களை ஆக்கியருளி முறையாக நடத்தியருளும் முதற்பொருளே! எல்லையில்லாத மேலாம் சிவபெருமானே! உயிர்களுக்குயிராகத் தங்கியருளும் நின்னை நின் திருவருளால் உணர்ந்தே மறவா நினைவுடன் இருத்தலாகிய தூங்காமற்றூங்கும் நிலை எய்தினல்லால் பேரின்பம் உண்டோமோ?
(வி - ம்.) ஓங்காரம் தூமாயையின் காரியமாகும். அத் தூமாயையினைத் தொழிற்படுத்துந் தூயோன் விழுமிய முழுமுதல்வன் சிவபெருமான். அவனுக்குரிய திருமந்திரம் செந்தமிழ்ச் "சிவயநம" என்னும் திருவைந்தெழுத்தாகும். இம் மந்திரம் ஓங்காரத்திற்கு உயிராகும். ஓங்காரம் ஏனைய மந்திரங்கள் அனைத்திற்கும் உயிராகும். ஏனைய மந்திரங்கள் உடலாகவும், ஓங்காரம். உயிராகவும், திருவைந் தெழுத்து உயிர்க்குயிராகவும் நிற்கும். ஒருபுடையொப்பாக உடலும், உயிரும், உயிர்க்குயிரும் நிற்கு நிலையினைக் கூறலாம்.
எடுத்துக்காட்டாக "ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திரம் எட்டெழுத்து மந்திரமெனப்படும். (ஓம் - ந-மோ-நா-ரா-ய-ணா-ய) எட்டெழுத்தாலாகிய இம் மந்திரம் ஓங்காரம் நீங்கப்படுமாயின் ஏழெழுத்தாவதன்றி எட்டெழுத்தாகாது. ஆனால் திருவைந்தெழுத்துடன் ஒம் சேர்க்கப்படின் அஃது ஆறெழுத்தாகி ஐந்தெழுத்தெனும் சிறப்புப் போய்விடும். எனவே அகற்கு மட்டும் ஒங்காரம் சேர்க்கவேண்டியதில்லை! மந்திரமெல்லாமுடலாம் மற்றுயிரோங்காரமதற், குந்துமுயிர் அஞ்செழுத்தாம் ஓம் என்னும் உண்மை காண்க.
சிவமாதி நான்முகக் கோவந்த மாமறை செப்புகின்ற | நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டற்ற நன்மைபெறா | தவமே தரும்ஐம் புலப்பொறிக் கேயென் னறிவுபொல்லாப் | பவமே விளைக்கவென் றோவெளி மானெனப் பாய்ந்ததுவே. |
(பொ - ள்.) சிவபெருமானே, ஆதியாகிய முதற்பொருளென்று நான்முகன் கற்றுக்கொண்ட வேதங்களின் வாயிலாகச் சொல்லப்படும் புதுமையாய்த் திகழ்கின்ற ஒப்பில்லாத ஒன்றாகும். அவ்வொன்றே இரண்டன்மை எனப்படும் அத்துவிதப் புணர்ப்பு நிலையாகும். அந்நன்மை