பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

485

போக்கிப் புறக்கணித்தல் வேண்டா; வீடுபேற்றினைக் கூடுமாறருளிக் கூட்டுவிக்கும் தெய்வ மன்றமாம் திருச்சிற்றம்பலத்தைக் கருதிக் கண்டு கழல்பணிந்து கை தொழுது கும்பிட்டுப் பேரின்பப் பேறுபெற உலகவரே சேர வருவீராக.

     (வி - ம்.) உலகில் வழங்கி வரும் சமயங்களை அகம் புறம் எனத் தொகையான் இரண்டாகப் பகுப்பர். அவை ஒவ்வொன்றும் வகையான் அவ்வாறாகும். பின் அவ்வகையும் அகச்சமயம், அகப்புறச் சமயம் எனவும், புறச்சமயம் புறப்புறச் சமயம் எனவும் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் அவ்வாறாய் விரியான் இருபத்து நான்காகும். இவ்விருபத்து நான்கு சமயங்களும் நிலமுதல் ஓசை (நாமம்) முடிவாகச் சொல்லப்படும் மெய்கள் முப்பத்தாறனுள் அடங்கும்.

     நல்ல சிவனை விழுமிய முழு முதல்வனாகக் கொண்டு செந்தமிழ்த் திருமாமறை திருமாமறை வழியாக வழிபட்டு வரும் செம்பொருட்டுணிவாம் சித்தாந்த சைவம் சிவனெறி எனப்படும். அந் நெறி இம் முப்பத்தாறு மெய்களும் கடந்த நன்னெறி. அதுவே சமயாதீ தப்பொருளாம் சிவனைக் காட்டும் திருநெறி; இது பொதுநெறி யெனவும், பெருநெறி யெனவும், ஒளிநெறி யெனவும், அருணெறி எனவும், மெய்ந்நெறி எனவும், நன்நெறி எனவும் இன்னும் பலவாறாகவும் வழங்கப்படுகின்றது. இப் பொதுமை யுண்மையினைச் "சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலமே" காட்டும் - இவ்வுண்மைகள் வருமாறு :

"மொய்தரு பூதம் ஆதி மோகினி அந்த மாகப்
 பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று
 மெய்தரு சைவ மாதி இருமூன்றும் வித்தை யாகி
 எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே."
- சிவஞானசித்தியார் 2. 4. 1.
"என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
    இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
 சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
    சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
 ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
    உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
 பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
    புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே."
- 6. 98 - 5.
"உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
    போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
 அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர
    அருளினை எனப் போற்றி 1
 இணையில் வண்பெருங் கருணையே ஏத்திமுன்
    எடுத்தசொற் பதிகத்தில்
 புணரும் இன்னிசை பாடினர் ஆடினர்
    பொழிந்தனர் விழிமாரி."
- 12. சம்பந்தர், 1 - 1
 
 1. 
'அண்ணலார்தமக்.' 12. சம்பந்தர், 160.