பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

497

அவ்வாழ்வுக்கு இன்றியமையாத செல்வமும் உண்டாகும்; நன்மக் கட்பேறும் உண்டாகும்; நன்மை வாய்ந்த நட்பு முதலிய உறவுகளும் உண்டாகும்; எப்பொழுதும் நல்ல திறமைகளும் உண்டாகும்; படுக்கை முதலிய வாய்ப்புகளும் உண்டாகும். எடுத்துக்காட்டாக, நமன் தூதர்கள் வந்து அணுக முடியாதபடி திருவடிப்பேறு முண்டாகும்; இப் பேற்றுக்கு வாயிலாம் மெய்கண்ட நூல்களான் இது வரும். மூதறிவாம் சிவஞானப் போரொளியும் உண்டாகும்; நற்றிறமையு முண்டாகும். திருவடிப்பேற்றுக்குரிய இந்நல்லுடம்பு நெடுநாள் நிலைத்திருப்பதாகிய காயசித்திகளும் உண்டாகும்.

     (வி - ம்.) பவிசு - திறமை. தவிசு - படுக்கை. திட்டாந்தம் - எடுத்துக்காட்டு. யமபடர் - நமன்றூதர். திமிரம் - இருள். சதிர் - திறமை. மதியுண்ட - அறிவைத் தன்னுள் அடக்கின (உயிர்களின் சிற்றறிவைத் திருவருள் தன் பேரறிவினுள் விழுங்குதல்). மதுசூதனன்: மது - ஓர் அரக்கன். சூதனன்-அழித்தவன். மது என்னும் அரக்கனைக் கொன்ற திருமாலுக்கு அம்மையை இளையவள் என்னும் உருவகவுண்மை ஒருவன் ஒரு செயலை அறிவு, ஆற்றல், ஆக்கம் அமைகருவி முதலியன கொண்டு செய்துமுடிக்கின்றான் எனினும் செய்வோன் பெயர் முன்னாகின்றது. அவ்வறிவு முதலியவற்றின் பெயர் பின்னாகின்றன. முன் உள்ளதை மூப்பென்றும்; பின்னுள்ளதை இளமை யென்றும் உரைப்பர்.

     அம்மையின் திருவருள் வலத்தால் திருமால்1 மது என்னும் அரக்கனை அழித்தனர். அவருடைய பெயர் செய்தோன் பெயர் முன்னாம் முறையில் மூத்தோன் என மொழியப்படுகின்றது. திருவருள் ஆற்றல் உண்ணின்றியக்கியமையால் செய்வித்தோன் பெயர்போல் ஆகித் தங்கையென்று மொழியப்படுகின்றது. செய்தோன் பெயர் முன்னாம் செய்வித்தோன் பேர் பின்னாம் வையமால் தங்கை வழக்குண்மை வரும் சிலப்பதிகாரப் பாட்டானு முணரலாம்.

"பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்
 அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
 மருதி னடந்துநின் மாமன்செய் வஞ்ச
 உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்."
- சிலப்பதிகாரம், 12. வேட்டுவவரி.
(1)
தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
    சிற்றிடையி லேநடையிலே
  சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
    சிறுபிறை நுதற்கீற்றிலே
பொட்டிலே அவர்கட்டு பட்டிலே புனைகந்த
    பொடியிலே அடியிலேமேல்
  பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
    புந்திதனை நுழைய விட்டு
 
 1. 
'சங்கேந்தும்' காஞ்சிப் புராணம் - கடவுள் வாழ்த்து.