பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

5

     இக்கொள்கைகளை உணருமாறு கருவாய்க் குறிப்பிக்கும் தனித் தமிழ்ச் சிவஞானபோதத் திருமாமறை வருமாறு:

"தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
 எம்மை யுடைமை எமையிகழார் - தம்மை
 உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
 புணராமை கேளாம் புறன்."
- சிவஞானபோதம் - அவையடக்கம்.
சொல்லப்படாத பின்னுள்ள சமயக் கொள்கைகளும் இவற்றுள் அடங்கும்.

     இம் முதற்றிருப்பாட்டின் கருவாயமைந்து விளங்கும் திருமுறைத் திருப்பாட்டு வருமாறு:

"அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாங்
 குறியது உடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்
 கறிவினில் அருளான் மன்னி அம்மையோ டப்ப னாகிச்
 செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்."
- சிவஞானசித்தியார், மங்கல வாழ்த்து (1)
ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும்
    உறவனந் தம்வினையினால்
  உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
    தோஅனந் தம்பெற்றபேர்
சீரனந் தஞ்சொர்க்க நரகமும் அனந்தநற்
    றெய்வமும் அனந்தபேதந்
  திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான
    சிற்சத்தியா லுணர்ந்து
காரனந் தங்கோடி வருஷித்த தெனஅன்பர்
    கண்ணும்விண் ணுந்தேக்கவே
  கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங்
    கடவுளைத் துரியவடிவைப்
பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
    பெரியமௌ னத்தின்வைப்பைப்
  பேசரும் அனந்தபத ஞானஆ னந்தமாம்
    பெரியபொரு ளைப்பணிகுவாம்.
     (பொ - ள்.) ஊரனந்தம் . . . அனந்த பேதம் (பிறந்த) ஊர்களோ அளவில்லன, பற்பல பிறவிகள்தோறும் பெற்ற பேர்களோ அளவில்லன,