பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

503

     (வி - ம்.) மோகம், மதம், குரோதம், லோபம், மாற்சரியம், காமம் என்னும் ஆறும் ஆருயிர்கட்கு ஒட்டிப் பெருந்துன்பம் விளைக்கும் மட்டில் பெருநோயாகும். அதனால் இவற்றைப் பகை யென்று பலரும் பகர்வர். சம்பந்தப் பெருமானாரும் "அறுபகை செற்று" என அருளினர். திருவள்ளுவநாயனாரும் இவற்றைக் குற்றம் என்றருளினர். அது வருமாறு :

"செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
 பெருக்கம் பெருமித நீர்த்து."
- திருக்குறள், 431
"இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
 உவகையும் ஏதம் இறைக்கு."
- திருக்குறள், 432
(6)
தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
    தொக்கினுட் சிக்கிநாளுஞ்
  சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
    சூறையிட் டறிவைஎல்லாம்
நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
    நட்பேற உள்ளுடைந்து
  நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
    நானிலந் தனில்அலையவோ
வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
    விரையேறு மாலைசூடி
  விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
    வெருட்டிய கருங்கூந்தலாய்
வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
    மனதுக் சிசைந்தமயிலே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
     (பொ - ள்.) அழுக்கேறுந் தன்மைவாய்ந்த ஆடைபோல் இருவினைகள் ஏறியுள்ள உடம்பெனும் தோற்பையிலுள்ளாக எந்நாளும் அடைபட்டு, நாடொறும் சுழன்றுவரும் காற்றிடைப்பட்ட பஞ்சு தீப்பற்றிப் பறக்கும் பஞ்சு போன்று, எளியேன் அறிவை யெல்லாம் கொள்ளை கொண்டு நாளும் மிகுதியாக, முதுமைப்பருவம் என்று சொல்லப்படும் கூற்றுவனுடைய நட்பு ஒருநாளைக்கு ஒருநாள் கூடுதலாகி நெருங்கிவர, கண்ணற்ற ஊர்ப் பன்றியைப் போல (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) நானிலந்தன்னில் அடியேன் அலைந்துதிரியவோ?

     கருவேளாகிய மன்மதன் ஏறிவரும் இருளெனப்படும் யானையையும், மேகங்களெனப்படும் யானையையும் ஒருசேரவென்று, வெற்றி