பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

505

நான்மறைவல்ல படைப்போனாகிய வஞ்சகன் விதித்தனன். இவ்வாறான துன்பங்கள் அனைத்தும் எளியேனை விட்டு விலகி வீழ்ந்தழியும்படி நின்திருவருள் செய்வையோ?

     (வி - ம்.) சழக்குரைத்து - குதர்க்கம் பேசி, வழக்கழித்து - முறையைக் கெடுத்து, வழக்கு - தர்க்கம்.

(8)
வட்ட மிட்டொளிர்பி ராண வாயுவெணு
    நிகள மோடுகம னஞ்செயும்
  மனமெ னும்பெரிய மத்த யானையைஎன்
    வசம டக்கிடின்மும் மண்டலத்
திட்ட முற்றவள ராச யோகமிவன்
    யோக மென்றறிஞர் புகழவே
  ஏழை யேனுலகில் நீடு வாழ்வன்இனி
    இங்கி தற்கும்அனு மானமோ
பட்ட வர்த்தனர் பராவு சக்ரதர
    பாக்ய மானசுப யோகமும்
  பார காவிய கவித்வ நான்மறை
    பராய ணஞ்செய்மதி யூகமும்
அட்ட சித்தியுந லன்ப ருக்கருள
    விருது கட்டியபொன் அன்னமே
  அண்ட கோடிபுகழ் காவை வாழும்அகி
    லாண்ட நாயகியென் அம்மையே.
     (பொ - ள்.) சுழன்று சுடர்விட்டு விளங்குகின்ற உயிர்மூச் சென்னும் நீங்காவிலங்குடன் நடந்து செல்கின்ற மன மென்று சொல்லப்படும் மதங்கொண்ட பெரிய யானையை (நின்னருளால்) அடியேன்வசம் அடங்கும்படியாகச் செய்தால் மூன்று உலகங்களிலும் விரும்பத்தக்க, வளப்பம் பொருந்திய சிவராசயோகம் அடியேனுக்கு அமையப் பெற்று, இஃது இவனுடைய நற்பேறென்று மெய்யுணர்வு கைவந்த மூதறிஞர்கள் புகழும்படியாக ஏழையேன் இவ்வுலகின் கண் நீடுவாழ்வேன்.

     இனி இங்கு இதற்குக் கருதலளவையென்று சொல்லப்படும் அனுமானமோ, (நீ எழுந்தருளி வருமாறு திருவருள் புரிவது) வேந்தர்கள், போற்றிப் புகழ்கின்ற உலகாளும் சக்கிரப் பேறு என்று சொல்லப்படும், நற்பேற்றுத் திகழ்வினையும், பெருங் காப்பியங்களின் புலமையையும், நான்குவேதங்களையும் முறைப்படி