''''ய'''' கர மெய் ஆகார உயிர் ஒன்றுடன் மட்டும் மொழி முதலாம். தமிழ் எண்களில் பத்து ''''ய''''கரம் போல எழுதப்படும். யகரம் ஆருயிரைக் குறிக்கும் குறிப்பு எழுத்து. இஃதடியார் குணம் பத்தினையும் அவர் ஆண்டான் திருவடிக்கண் வைக்கும் பற்றினையும் குறிக்கும். நகரம் ஆணவ வன்மையோடு சேர்ந்த ஆருயிர்களை மென்மையாக்குவதால் அது மெல்லினமாயிற்று. அந்நகர எழுத்துக்குக் கருவி மருள் என்னும் மாயை. அதுவும் மெல்லினமாயிற்று. சரணம் எடுத்துச் சுமக்கும் திருவடியாதலால் அதுவும் வல்லினத்து அமைந்துள்ளது.
உயிரடையாளமாகிய ''''ய''''கரம் திருவருட்குப் பின்னுமுன்னுமாக நின்று நடுவாகின்றது. "சிவயவசி" என்பதனை நோக்குக. திருவருள் இடை நின்று உயிர்களைக் கூட்டுவிப்பதால் ''''வ''''கர இடையினமாயிற்று. மறைப்பாற்றல் உயிர்களை மென்மைப் படுத்துவதால் ''''நகர'''' மெல்லினமாயிற்று.
இவற்றை வருமாறு நினைவு கூர்க:
|
ஐந்து சிவயநம ஆறு திரு நீலகண்டம்
|
|
மந்திரமாம் மன்னுமறி வாற்றல்மாண் - பெந்தமையாள்
|
|
தில்லைத்திருச் சிற்றம்பலம் சீரெட் டெழுத்தன்பாம்
|
|
நல்லசிவன் தாள்சேர்க்கும் நாடு.
|
|
மன்னு மியக்குமுயிர் வாழ்த்தி இயங்குமுயிர்
|
|
துன்னுமும்மெய் ஐந்தெழுத்துள் தோய்ந்து.
|
தில்லைத் திருச்சிற்றம்பலம் முற்றாகவரும் திருப்பாட்டு வருமாறு:
|
"எம்பிரான் போற்றி வானத் தவரவ ரேறு போற்றி
|
|
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி
|
|
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி
|
|
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி."
|
|
- 8. காருணியத்திரங்கல், 7.
|
தலைப்பு 1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் : இதன்கண் விழுமிய முழுமுதலாம் சிவபெருமானைப் படர்ந்து, பரவிப் பனிந்து வணங்கும் பான்மை மொழியப்பட்டது. படர்தல் - உள்குதல். பரவுதல் - வாழ்த்துதல். பணிதல் - தொழுதல். இது முப்பொருளுண்மை மொழிகின்றது. அதன் விளக்கத்தைப் பக்கம் 11 இல் காண்க. இது முதல் தலைப்புப் பதின்மூன்று முடிய திருக்கடைக் காப்பின் பெயரால் அமையப் பெற்றன.
2. பரிபூரணானந்தம் : முப்பொருள்களுள் முதன்மை வாய்ந்தவன் முழுமுதல்வன். அவன் எங்கும் நீக்கமற நிறைந்து