தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xi

"தன் கடன் அடியேனையுந் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பதே" என அப்பர் பெருமானார் திருமொழியான் உணரலாம். மாயை சிவபெருமானுக்கு உடைமையாகும். அவ்வுடைமையைக் கொண்டே நாவாயால் கடல் கடப்பிப்பது போன்று நம்மைப் பிறவிப் பெருங்கடலினின்று கடப்பித்தருள்கின்றனன். தோன்றியருளிய மௌனகுரு செய்தருளுங் கருணை இதனால் கூறப்படுகின்றது. ஆகையால் தலைப்பியைபு தானே விளங்கும். இவ்வுண்மை பக்கம் 113 - 114 இல் காண்க.

     7. "சித்தர்கணம்" அந்தண்மை மேலீட்டால் ஆண்டவன் செய்தருளும் வியத்தகு அருளிப்பாட்டின் உண்மை வெளிப்பட அவன் திருவருள் கைவந்த அகத்தவச் சித்தர் கூட்டங்களும் சில வியத்தகு செயல்களைப் புரியும். அதனால் இஃது அதன் பின் அமைந்துள்ளது. இறைவன் திருவடியை அடைவதற்கு மக்கட் பிறப்பே சிறந்தது. விண்ணுறு தேவர்களும் மண்மேல் வந்துதான் பிறப்பறப் பேரின்பந் துய்க்க முடியும். இப் பிறப்பின் அருமையினை பக்கம் 135 இல் காண்க.

     8. "ஆனந்தமான பரம்" சித்தர் கணத்தாரும் ஞானமெய்ந் நெறியாகிய கொல்லா விரதங் கைக்கொண்டாலன்றிப் பேரின்பம் எய்துதல் முடியாது. அதனால் இஃததன்பின் வைக்கப்பட்டது. மோன விதை விதைத்துப் பயன்பெறச் செய்தருளுவதே ''''ஆனந்தமான பரத்தின்'''' பரமாம்: இதனைப் பக்கம் 154 இல் காண்க.

     9. "சுகவாரி" மோனங் கைகூடியவர்க்குண்டாவது பேரின்பப் பெருங்கடலேயாம். சேயினைக் கைவிட்டுவிடாது காக்கும் தாய்போல் ஆருயிர்களை ஆண்டவன் காத்தருளும் உண்மை பக்கம் 174 இல் காண்க.

     10. "எங்கு நிறைகின்ற பொருள்" உயிரினுக்குயிராகிய ஆண்டவன் நிறைந்துநிற்குந் தன்மையால் பேரின்பம் பெருகும். பேரின்பம் பெருகுவதற்கு வாயில் உண்மையுணர்ந்து இறை பணியில் நிற்றலேயாம். இது பக்கம் 184-185 இல் கூறியவாற்றான் உணரலாம்.

     11. "சச்சிதானந்த சிவம்" எங்கு நிறைந்த அப்பொருள் உண்மை, அறிவு, இன்ப உருவச் செம்பொருள். உண்மை-அழவில்லாதது; என்று முள்ளது. அறிவு - தானே விளங்கும் இயற்கைப் பேரறிவு, இன்பம் - "பேரா ஒழியாப் பிரிவில்லா, மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடல்." ஆருயிர்களும் என்றும் அழியா உண்மையன; சிற்றறிவுடையன,