தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xv

     27. "பாயப்புலி" : இதுவும் முதல் நினைப்பாற் பெற்ற பெயர். மாயாகாரியப் பொருள்களைத் திருவருள் துணையால் தன் வழிப்படுத்துதல் வாய்க்கும். அம் மாயையின் கொடுமை நோக்க அது கடும்புலியை யொக்கும். அதன்முன் கூட்டி நிறுத்தப்பட்ட ஆருயிர் மானினை யொக்கும் என விளக்குந்தன்மையால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. அங்ஙனமாயினும் அறிவித்தவாறு அறிய வல்லும் நிலைமையினை ஆக்கியருளித் தன் தாளிணையைத் தந்தளித்தனன் ஆனந்தக் கூத்தன். இதனைப் பக்கம் 437 இல் காண்க.

     28. "உடல் பொய்யுறவு" : மாயாகாரியமாகிய இவ்வுடல் நிலையில்லா வுறவு. நிலையில்லா உறவெனினும் பொய்யுறவு எனினும் ஒன்றே. கையிற் கடையமும் கைவிரலில் கணையாழியும் விட்டுநீங்காது உறவுபோல் ஒட்டியுறினும் அவை விட்டு நீங்கும் தன்மைய. அவை போன்றதே உடலும் கையும் விரலும் விட்டு நீங்காமை போன்றது என்ப. ஆருயிருடன் பேருயிராகிய இறைவன், அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. மெய்யுறவாம் சிவனே குருவாக எழுந்தருள்வன். அவன் இவன் என்னும் சொற்களின் விளக்கம் முதலியவற்றைப் பக்கம் 473 இல் காண்க

 
ஈருயிர்சேர் வன்மைசிவவ் யவ்விடைமை மென்மைநம
 
ஓருந் தமிழஞ் செழுத்து.
     29. "ஏசற்ற நிலை" : உடல் பொய்யுறவு எனக் கொண்டார்க்கே குற்றமில்லாத இறைவன் திருவடியாம் மெய்யுறவு கைகூடும். அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. பொய்யுறவாம் நெஞ்சு திருவடியிணை சார்ந்தாரை விட்டு மாயமாய் மறைந்தடங்கியது பெருவியப்பாகும். இதனைப் பக்கம் 483 இல் காண்க.

     30. "காடுங்கரையும்" : மாயையின் காரியமாகிய உடலுறுப்புகளுள் அகப்புறக்கலனாகிய மனமே நடுநிற்பது, மனமடங்கக் கற்பதே மாண்பு. அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. மனமடங்கும் வாயில் சைவ சமயம் சார்தல், சைவம் என்பது செம்பொருட்டுணிவெனப்படும் சித்தாந்த சைவம். இதனை பக்கம் 485 இல் காண்க.

     31. "எடுத்த தேகம்" : சைவசமயஞ் சார்ந்தார் தம் ஆவியும் உடலும் உடைமையும் எல்லாமும் உளமுணந்து ஆண்டான்பால் ஒப்புவிப்பர். அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.