தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xvii

அதனால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. இதனைப் பக்கம் 497 இல் காண்க.

     38. "அகிலாண்ட நாயகி" 39. "பெரிய நாயகி". இவ்விரண்டும் அருளாற்றலின் விளக்கமேயாதலின் அதன் பின் வைக்கப்பட்டன.

     40. "தந்தைதாய்" : திருவருளாற்றலால் நிகழும் குரு மொழியினால் நிலையாமை யுணர்வு நிலைத்துத் தோன்றும். அதனை விளக்குவது இதுவாதலின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

     41. "பெற்ற வட்கே" மெய்யடியார்களின் மெய்த்தன்மை விளக்குவதால் இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

     42. "கல்லாலின்" : மெய்யடியார்கள் மெய்ப்புணர்ப்பின் வாயிலாகத் துய்க்கும் பேரின்பம் சொல்லொணாதது. அவ்வுண்மையினைக் குருவாக எழுந்தருளிய கல்லாலமர் செல்வனே கையடையாளத்தினால் உணர்த்தினமையா னுணரலாம். இதனை யுணர்ந்து உறுதியொடு நிற்பராதலின் இஃது அதன்பின் வைக்கப்பட்டது. சிவனையடைதற்கு நேரியவாயில் மூவர் முதலாயினரருளிய தேவார முதலிய செந்தமிழ்த் திருமாமறைகளாம். இதனைப் பக்கம் 518 இல் காண்க.

     43. "பராபரக்கண்ணி" 44. "பைங்கிளிக் கண்ணி" 45. "எந்நாட்கண்ணி" 46. "காண்பேனா என் கண்ணி" 47. "ஆகாதோ என் கண்ணி" 48. "இல்லையோ என் கண்ணி" 49. "வேண்டாவோ என் கண்ணி" 50. "நல்லறிவே என் கண்ணி" ஆகிய எட்டும் ஈற்றுநிலை பற்றி அமைந்த பெயர்களாகும். 51. "பலவகைக்கண்ணி" இதன் பெயரமைப்பு இதன் நிலையான் நன்குணரலாம். 52 "நின்ற நிலை" 53. "பாடுகின்ற பனுவல்" இவை முதல் நினைப்பாலமைந்தன. 55. அகவல், 56. வண்ணம் இவை யாப்பின் பெயரான் அமைந்தன.

     தலைப்பு 56. 5 யும் 6 யுங் கூட்டின் 11 வரும். இவை முகமைந்தும் உறுப்பு ஆறும் ஆகிய பதினொரு மந்திரங்களைக் குறிக்கும் குறிப்பாகும். மொத்தப் பாடல்கள் 1452 ம் கூட்டின் 12 வரும். இவை திருமுறைகள் பன்னிரண்டனையும் குறிக்கும் குறிப்பாகும். இதனால் தாயுமான அடிகள் தென்றமிழ் காட்டு நன்னெறியாம் செம்பொருட்டுணி வெனப்படும் சித்தாந்த உலகத்திற்கே உரியவரென்னும் உண்மை செவ்விதிற் புலனாம். அங்ஙனமிருந்தும் பேர்கொண்ட பார்ப்பார் போன்று தங்களை