தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xviii

வேதாந்தியெனப் பொய்ப்பெயர் புனைந்து புலம்பித் திரியும் மாயாவாதிகள் தங்கள் கொள்கையர் தாயுமான அடிகள் எனத் தலைதடுமாற்றங்கூறி உலைவுற்று உழலுகின்றனர். இஃது எண்ணவுமுடியாத வியப்பினும் வியப்பன்றோ?

 
"பன்மு கச்சமய நெறிப டைத்தவரும்
 
    யாங்க ளேகடவு ளென்றிடும்
 
 பாத கத்தவரும்"
 
- பக்கம் - 257.
என அடிகள் வன்மை யாகக் கண்டித்திருக்கும் கண்டனக் கட்டுரை அக் கொள்கையர் கண்ணில் பட்டிலதோ? பட்டும் மதிமயக்கோ? அன்றியும் அவர்களுக்கு எல்லாங் கற்பனையாதலின் இதுவுங் கற்பனை என்ற கருத்தோ? அறிகின்றிலம்.

     "நாம் பிரமமென்றால்" உயிர் முனைப்புத் தோன்றும், உயிர் முனைப்பென்றாலும் ஆணவ முனைப்பென்றாலும் ஒன்றே. இதனை,

 
"நாம்பிரம மென்றால் நடுவேயொன் றுண்டாமால்
 
 தேம்பிஎல்லா மொன்றாய்த் திகழுநாள் எந்நாளோ"
 
- எந்நாட்கண்ணி - 15 - நிலை பிரிந்தோர் - 7
என்பதனால் வலியுறுத்தினர்.

     இவ்வுண்மை நெஞ்சு விடுதூது என்னும் சித்தாந்த நூலுள், 112. "தாம்பிரமங் கண்டவர்போல் தம்மைக்கண்டாங்கதுவே நான்பிரமம் என்பவர்பால் நண்ணாதே" என நவிலப்பட்டுள்ளது. இக் கொள்கையினர்க்கு முந்தின நிலை உலகாய தன் நிலையாகும். பிந்தினநிலை புத்தன்நிலை. இதனால் நான் பிரமம் என்பார்நிலை மிகவும் தாழ்வான நிலையாகும். மேலும் சிவ சமவாதம் கூறுவோரும் கிட்டத்தட்ட இவரோடொப்பர் என்னும் உண்மை "வேதசாத்திரமிருதி (98)" என்னும் தமிழாகமத் திருப்பாட்டானுணரலாம். சமய விளக்கங்களைப் பக்கம் 259 இற் காண்க. மாயாவாதக் கொள்கையினிற் செலுத்துவதே "அகம் பிரமாஸ்மி" என்னும் சங்கராச்சாரியார் கொள்கை என்ப. இக் குற்றம் "மன்னர் விழைப விழையாமை மன்னரான், மன்னிய ஆக்கந் தரும்" என்னும் தமிழ்மறைக்கண் (692) காணப்படும்.

     தாயுமான அடிகளின் கடவுட் கொள்கையினை 45. எந்நாட்கண்ணி - 1. தெய்வவணக்கம் என்னுந் தலைப்பில் வரும் செய்யுட்களான் உணரலாம். 1. மன்றாடுங் கடவுள் சலமகளைத் தாங்கிய திருச்சடையினை உடையவன். நிலவெறிக்கும் நீண் முடியன். திருநீலகண்டத் தேவதேவன். அவனே திருவருட்டொழில் ஐந்தனையும் பெருந்தண்ணளியால் இடையறாது புரிந்தருளும்