|
ஆரறிவாம் ஆனைமுகன் ஆற்றலருள் ஆறுமுகன்
|
|
ஏரன்பாம் சண்டீசர் ஏத்து.
|
சண்டீசர் பெருமையினைப் பெரிய புராணத்துள் விரிவாகக் காண்க. வடமொழி வேதவழி யொழுகும் வேதியர் சிவவழி பாட்டினும் சிறுதெய்வ வழிபாடாம் கொலை வேள்வியினையே பெரிதாக எண்ணிச் செய்து கொண்டுவருபவர். அதனைத் தாயுமான வடிகள் வன்மையாகக் கண்டிக்கும் இடம் வருமாறு:
"துள்ளுமறி யாம்மனதைப் பலிகொடுத்தேன்" (122) என்னும் செய்யுளாகும் தென்றமிழ் மறையாம் ஆகம வழி யொழுகுவோர் கொலைபுலை இல்லா அவிவேள்வியே புரிவர். இவ் வேள்வி சிவவழிபாட்டினுக்கு உறுப்பாகும். சிவ வழிபாட்டினைச் சண்டீசர் புரிந்தருளினர். சிவ வேள்வியின் குறிப்புணர்த்தும் திருமந்திரப்பாட்டு "பலியும் அவியும்" (399) எனத் தொடங்குவதாகும்.
சண்டீசர் செய்பூசைச் சிறப்பு வருமாறு:
|
"பெருமை பிறங்கும் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்தம் உள்ளத்தில்
|
|
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான
|
|
திருமஞ் சனமே முதலவற்றில் தேடா தனஅன் பினில்நிரப்பி
|
|
வருமந் நெறியே அருச்சனைசெய் தருளி வணங்கி மகிழ்கின்றார்."
|
|
- 12. சண்டேசுரர் - 37.
|
|
"அண்டர் பிரானுந் தொண்டர் தமக் கதிப னாக்கி அனைத்துநாம்
|
|
உண்ட கலமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச்
|
|
சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங்கவர்பொற் சடைமுடிக்குத்
|
|
துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்."
|
|
- 12. சண்டேசுரர் - 56.
|
இனி அடிகள் மேற்கொண்டுள்ள அடியார் திருக்கூட்டம் எவர் எவர் என்பது வருமாறு: 1. திருஞான சம்பந்தர் 2. திருநாவுக்கரசர் 3. திருநாவலூரர் (சுந்தரர்), 4. திருவாதவூரர் 5. பட்டினத்தார் 6. பத்திரகிரியார் 7. சிவவாக்கியர் 8. திருமூலநாயனார் 9. அருணகிரியார் 10. விண்ணவர், மண்ணவர் முதலிய பத்தர் பலர் என்பவராவர். இம் முறையே சித்தாந்த சைவர் மேற்கொள்ளவேண்டிய செம்முறையாகும்.
இனி அடிகள் மேற்கொண்டுள்ள குருமரபு வருமாறு: 1. கல்லால நீழலில் வீற்றிருந்து அறிவடையாளக்கையால் அனைத்துண்மைகளையும் காட்டியருளும் ஆலமர் செல்வன். 2. நந்தியங் கடவுள், 3. சனற்குமாரர் (சத்திய ஞானதரிசினி), பரஞ்சோதியார், 2 - 3 இல் ஓதப்பட்டுள்ள நால்வரும் திருக்கயிலாயத்து அகச் சந்தானத்தவராவர்.