4. மெய்கண்ட நாதர் 5. அருணந்தி சிவம் 6. மறைஞான சம்பந்தர் 7. உமாபதி சிவம் இந்நால்வரும் புறச் சந்தானத்தனராவர். 8. மெய்கண்ட பரம்பரை. 9. மவுனகுரு (இவரே தாயுமான அடிகளின் ஞானகுரு), இவ் வொன்பதின்மரும் அடிகள்கொண்ட குரு மரபினராவர்.
அடிகள் அறிஞருரை என்னுந் தலைப்பில் 1. திருநாவுக்கரசர் 2. அருணந்திசிவம். 3. நம்பியாரூரர். 4. மாணிக்கவாசகர். 5. அருணகிரியார் முதலிய சித்தாந்தச் செல்வருரைகளையே மேற்கொண்டனர். வடமொழி மொழிபெயர்ப்பில் கூறப்படும் எவரையும் மேற்கொண்டிலர் என்பதும் நினைவுகூரற்குரியது.
இனித் "தேவர் தொழும் வாதவூர்த் தேவே" எனத் தொடங்கும் செய்யுளில், 1. மாணிக்கவாசகர், 2. திருமூலர், 3. சிவவாக்கியர், 4. அருணகிரியார் ஆகிய நால்வர்களையும் விதந்தெடுத்தோதுகின்றனர். இதனால் சித்தாந்தச் செல்வர் அடிகள் என்பது தௌ¤வு. "தேவர் தொழும் தேவே" என்பது ஆளுடைய அடிகளாகிய மாணிக்கவாசகப் பெருமானையேயாம். அவர்தம் திருப்பெயர் ஆண்டுக் காணப்படாமைக்குரிய சிறுவிளக்கம் பக்கம் 296 இல் காண்க. "அடிமை, மகன்மை, தோழமை" ஆகிய மூன்றும் உடம்பு நீங்கா உயர்வற உயர்ந்த உயர்நிலையேயாம்; முற்றுப்பேறாகா. இவ்வுண்மை வருமாறு:
| |
"சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
|
| |
தாதமார்க் கம்என்றுஞ் சங்கரனை யடையும்
|
| |
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோக
|
| |
நற்கிரியா சரியையென நவிற்றுவதுஞ் செய்வர்
|
| |
சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய
|
| |
சாரூப்பிய சாயுச்சியம் என்றுசதுர் விதமாம்
|
| |
முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி
|
| |
முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்."
|
| |
- சிவஞானசித்தியார், 8 - 2 - 8.
|
சன்மார்க்கம் - நன்னெறி. "நன்னெறிக்குய்ப்பது நமச்சிவாயவே" என்பது தனித் தமிழ்மறை. சமயாசாரியர் நால்வர்களும் ஒத்த பண்பினரே. ஆயினும் வகுப்பாசிரியர் போன்று நான்குபடியினையும் நமக்கு உணர்த்தியருள நாயனால் நாட்டப்பட்ட நாடக உறுப்பினர். அந்த முறையில் நோக்கின் நன்னெறி நாடக வுறுப்பினராகிய மாணிக்கவாசகர் முற்றுப்பேறெய்திய