தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxii

மூதறிஞராவர். "நும்பின் எம்மை நுழையப் பணியே" என்னும் திருமாமறையின்படி முற்றுப்பேற்றின் ஆருயிர்க்கு உடலாகத் திகழ்வது சிவபெருமானே. அக் குறிப்பினாற்றான் திருவெம்பாவைத் திருவிழாவில் பத்தாம் நாள் அம்மை அம்பலவாணர் எழுந்தருள்வது, வாதவூரடிகளைத் தன்னுளடக்கித் தான் எழுந்தருள்வதாகும். இத் திருவிழா மூவர் முதலிகளுக்கு முன் தொட்டே நாடெங்கணும் பரவியுள்ளதென நாம் கருதலாம்.

 
"முத்தியிலுந் தேகமிசை மூவிதமாஞ் சித்திபெற்றார்
 
 எத்தனைபேர் என்றுரைப்ப தெந்தாய் பராபரமே."
 
- தாயு - பராபர - 209.
     மூவகையாஞ் சித்தியினை, உருவம், அருவுருவம், அருவம் எனப் பகர்வர். எடுத்துக்காட்டாக உருவசித்திக்கு ஆளுடைய நம்பி (சுந்தரர்) யையும், அருவுருவசித்திக்கு ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசர் ஆகிய இருவரையும், அருவ சித்திக்கு ஆளுடைய அடிகளையும் ஓதுப. அருவுருவ சித்திக்கு, இருவரமைந்தது முறையே பரப்பும் வரையறையுமென்னும் குறிப்பாகும். பரப்பு - வியாபகம். வரையறை - ஏகதேசம். பரப்பு, திருநல்லூர்ப் பெருமணம் வரையறை. திருப்புகலூர்ச் சிவக் குறி. இவற்றை வருமாறு நினைவு கூர்க:

 
நானெறிச்சீர் நாடகத்தால் நாட்டியருள் நால்வர்களும்
 
மேனெறியின் மேனெறிசேர் மேலோர்கள் - கோனடியைக்
 
கூடியசீர் கூறின் குறியோடு சோதியுடல்
 
ஆடியடி ஒன்றாய் அணைவு.
     மேனெறியின் மேனெறி - ஞானத்தின் ஞானம். குறி - சிவக்குறி. ஆடி - அம்பலவாணர்.

 
உற்றதிருத் தொண்டத் தொகையுட்டிரு வாதவூர்
 
பெற்ற அருளடிகள் பேரின்மை - உற்றுணரின்
 
முற்றுப்பே றுற்றார்க் குடம்பு முதல்வனருள்
 
தெற்றுணர்க தேவர்தொழுந் தேவு.
     பெயர் அனைத்தும் புறத்துத் தோன்றும் உடம்புபற்றியேயாம். அகத்துத் தோன்றும் பண்புபற்றியேயுமாம். வீடு பேற்றினர்க்குப் பண்புபற்றிய பெயர் அடிமை என்பதாம்.

    இவ்வுண்மை வருமாறு:

 
"யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
 
 யாவர்க்குங் கீழாம் அடியேனை - யாவரும்
 
 பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
 
 மற்றறியேன் செய்யும் வகை."
 
- 8. திருவெண்பா - 8.