தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxiii
 
"பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மை
 
 சாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ."
 
- தாயு. குருமரபு - 5.
[அவ்விருத்தம் "அறியாமை அறிவகற்றி" எனத் தொடங்கும் சிவஞானசித்தியார் (8 - 2 - 20)த் திருப்பாட்டாகும்] இதனானும் அடிகள் சித்தாந்த சைவர் என்பது தேற்றம்.

     சித்தாந்த சைவப் பெருமானை "வந்தெனுடல்" (282) எனத் தொடங்கும் செய்யுளால் நன்கு விளக்கியருளினர். முதல்வன் சாதி குலம் முதலிய ஏதுமில்லான் என்பதனை "சாதிகுலம்" (45) எனத் தொடங்கும் செய்யுளான் நன்குணரலாம். இதன் கருவாய் அமைந்துள்ளது "சிவன் அரு உருவம் அல்லன்" எனத் தொடங்கும் திருவிருத்தமாகும். சிவபெருமான் கலந்துங் கடந்து நிற்கும் நிலை பொது. கடப்பித்துக் கடந்து நிற்கும் நிலை உண்மை (ஈரியல்பாய் நிற்றல் பொதுவாகும். எங்குமாம் ஓரியல்பாய் நிற்றல் உண்மை.)

     "ஆக்கி அளித்து" எனத் தொடங்கும் பைங்கிளிக் கண்ணி 19 க்குக் கருவாய் நிற்பது "நோக்காது நோக்கி" எனத் தொடங்கும் சிவஞானபோத வெண்பாவாகும். ''''பொருளே நின்" (517) எனத் தொடங்கும் செய்யுட்குக் கருவாய் நிற்பது "பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர்" எனத் தொடங்கும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். "இப்பிறவி" (224) எனத் தொடங்கும் செய்யுளின் கருவாய்த் திகழும் செய்யுட்கள் ஆண்டே குறிக்கப்பட்டுள்ளன.

 
"ஒன்றிரண்டு மில்லதுவாய் ஒன்றிரண்டு முள்ளதுவாய்
 
 நின்ற சமத்துநிலை நேர்பெறுவ தெந்நாளோ."
 
- தாயு. எந்நாள். 14 - நிற்குநிலை - 15.
     இதற்குக் கருவாய் அமைந்துள்ளது அருணந்திசிவம் அருளிய இருபாவிருபது "உற்றவர் . . . " (20) எனத் தொடங்கும் அகவலின்கண்

 
"ஒன்றா காமல் இரண்டா காமல்
10
 ஒன்று மிரண்டு மின்றா காமல்
 
 தன்னது பெருமை தக்கா னாயினும்
 
 என்னது பெருமை எல்லா மெய்தித்
 
 தன்னை யெனக்குத் தருவதை யன்றியும்