தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxiv
 
"காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்றஅந்த
 
 வீண்பாவம் போய்அதுவாய் மேவுநாள் எந்நாளோ"
 
- தாயு, எந்நாள் - 14 நிற்குநிலை - 20.
     இதற்குக் கருவாய் அமைந்தன.

 
"காண்பானுங் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை
 
 காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானுங்
 
 காட்டுவதும் காண்பதுவுந் தண்கடந்தைச் சம்பந்தன்
 
 வாட்டுநெறி வாரா தவர்"
 
- வினாவெண்பா - 11.
என்பதும்,

 
"சன்மார்க்கஞ் சகலகலை புராண வேத
 
    சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
 
 பன்மார்க்கப் பொருள்பலவுங் கீழாக மேலாம்.
 
    பதிபசு பாசந்தெரித்துப் பரசிவனைக் காட்டும்
 
 நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
 
    ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்
 
 பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
 
    பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் காணே."
 
- சிவஞானசித்தியார், 8. 2 - 12
என்பதும் ஆகும். ஒருவர் ஆடையை உடுப்பதன் முன் அவ்வாடையுந் தாமும் வேறாக இருப்பதால் காண்பான் முதலிய மூன்றும் ஆங்கு நிகழும். உடுத்தபின் வேறன்மையால் அவை நிகழா. (காண்பான் முதல் மூன்றும் ஆடைக்கண் கட்டிய பின், காண்பதில்லை பேறொன்றே காண்பு.)

     "அது வென்றுன்னும்" (335) செய்யுட்கும் "அது வென்றால் எதுவென வொன் றடுக்குஞ் சங்கை" (287) என்னுஞ் செய்யுட்கும் கருவாய் அமைந்தது.

 
"அதுஇது என்ற ததுவல்லான் கண்டார்க்
 
 கதுஇது என்றதையும் அல்லான் - பொதுவதனில்
 
 அத்துவித மாதல் அகண்டமுந் தைவமே
 
 அத்துவிதி யன்பிற் றொழு"
 
- சிவஞானபோதம், 12. 4 - 1.
என்பதாம்.