(அடியளந்தான் - சிவபெருமான் திருவடியை அளந்தான்).
இனி அயன் தன்மையினைக் குறிப்பது வருமாறு:
|
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
|
|
கெடுக உலகியற்றி யான்."
|
|
- திருக்குறள், 1062
|
சிவபெருமானாரால் செய்யப்பட்ட இந் நிகழ்ச்சி பரவை வழக்காய் உலகறி உண்மையாய் இருவழக்கினும் நிலவுவதாயிற்று. இதனைத் திருமால் நெறியினரும் உள்ளக் காதலால் உபசாரமாகக் கூறி உண்மை புலப்படுத்தியுள்ளார். அது வருமாறு:
|
"புக்கடிமையினால் தன்னைக்கண்ட மார்க்கண் டேயனவனை
|
|
நக்கபிரா னுமன்றுய்யக் கொண்டது நாராயணனருளே
|
|
கொக்கலர் தடந்தாழைவேலித் திருக்குரு கூரதனுள்
|
|
மிக்க ஆதிப்பிரான்நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே."
|
|
- திருவாய்மொழி, 4. 10 - 8.
|
எந்நாட்கண்ணி - 6. தத்துவ முறைமை என்னும் தலைப்பின் கீழ் சித்தாந்த சைவச் சிறப்புத் தத்துவக் கொள்கையினை மேற்கொண்டு மிக எளியமுறையில் இனிமையாகப் பாடிய கண்ணிகள் அனைவரும் கைக்கொண்டு ஓதி யுளத்தமைத்தற்குரியன. இன்னும் மேல்வருவன பலவும் சித்தாந்தச் சிறப்பினையே விளக்குவன. எனவே பராபரக்கண்ணி முதலாக வரும் கண்ணிகள் பலவும் சித்தாந்தப் பாடம் பயில்வார்க்கு அடிப்படைப் பாடமாக அமைந்துள்ள உண்மை சிறிது நோக்கினும் பெரிதும் புலனாகும். சித்தாந்தம் பயில்வார் முதற்கண் இவற்றைப் பயில்வதே ஏற்புடைத்தாகும். அதுவே முறைமையுமாம்.
உயிர்களின் ஐந்தவத்தையினை மிகச் செம்மையாக "சாக்கிரமா" "சுழுத்திஇத யந்தனிற்" (397 - 399) எனத் தொடங்கும் செய்யுட்களால் நன்கு விளக்கியுள்ளனர். உவமை உருவக முதலாய அணிகள் ஆங்காங்கே பல காணப்படும். தற்குறிப்பேற்றம், சொற்பொருட் பின்வரும்நிலை, நுவலா நுவற்சி முதலியனவும் பலவாம். அவையெல்லாம் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன.
"கல்லெறியப் பாசி" எனும் செய்யுள் விளக்கும் எளிய வொப்பு. "பாசிபடு குட்டத்தில்" எனத் தொடங்கும் சிவஞான சித்தியார் இதற்குக் கருவாய் அமைந்துள்ளது. "பண்ணேனுனக்கான பூசையொரு வடிவிலே" (117) எனத் தொடங்கும் செய்யுட்குக் கருவாய் அமைந்தது "நிறையுடை நெஞ்சுளும்" (3. 26 - 4.) எனத் தொடங்கும் திருமாமறைத் திருப்பாட்டாகும். "எவ்வுயிரும் என்னுயிர்போல்" எனத் தொடங்கும் செய்யுட்குக் கருவாயமைந்தது