"ஈசனுக்கன்பிலார்" எனத் தொடங்கும் சிவஞான சித்தியாரின் திருப்பாட்டாகும். "கொல்லா விரத மொன்று கொண்டவரே நல்லோர்" என்னுஞ் செய்யுளில் காணப்படும் நல்லோர் சித்தாந்த சைவராவர். இவர்களே கொலைபுலை நீத்த சிவ வழிபாட்டுச் செல்வர். அதனாலேயே ஆறறிவு படைத்த மக்களுண்டு உய்வதற்கென்று முதல்வனால் தந்தருளப்பட்ட உணவுமுதல் நிலையியற் பொருள் வாயிலாக அமைந்தனவாம். அதனாலேயே அத் தூய வுணவுக்குச் சைவவுணவு என்னும் சிறப்புப் பெயர் அன்று தொட்டு இன்று காறும் வழங்கிவருகின்றது. நிலையியற் பொருள் - தாவரம். நிலைத்திணைப் பொருளென்பதும் இதுவே. நல்லார் சித்தாந்த சைவர் என்னும் உண்மை வருமாறு:
|
"கல்லால் நிழன்மலை
|
|
வில்லா ரருளிய
|
|
பொல்லா ரிணைமலர்
|
|
நல்லார் புனைவரே."
|
|
- சிவஞான போதம், மங்கல வாழ்த்து.
|
"எல்லாரும் இன்புற்றிருக்க" எனத் தொடங்குஞ் செய்யுளால் சித்தாந்த சைவச் செல்வரின் சிந்தனையின் மெய்ம்மை புலனாகும். "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்." இதனை "வையக முற்றுந் துயர்தீர்க" என எதிர்மறைமுகத்தான் ஆளுடைய பிள்ளையாரும் அருளினர்.
"கல்லாலின் நீழல்தனில்" (513) என்னுஞ் செய்யுளின் கருவாய் அமைந்தது, "அண்டசஞ் சுவேதசங்கள்" (2. 4 - 17) எனத் தொடங்கும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தமாகும். இதன்கண் "கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்" என ஓதப்பட்டுள்ளது. "கல்லாலின் நீழல் தனில்" என்பதில் "துரும்பு பற்றிக் கடல் கடக்கும் துணிவே யன்றோ" என்றனர். "கைகாட்" டென்பது நடைமுறையில் மேற்கொண்டு ஒழுகும் ஒழுக்கத்தைக் காட்டலென்பதாம்.
"கண்ணாவா ரேனும்" எனத் தொடங்கும் செய்யுட்குக் கருவாய் அமைந்தது "சங்கநிதி பதுமநிதி" (6. 95 - 10) எனத் தொடங்கும் திருமாமறையாகும். "வான்காண வேண்டின்" எனத் தொடங்கும் செய்யுளின் கருவாய் அமைந்தது, "பாவிக்கின் மனாதி வேண்டும்" (86) எனத் தொடங்கும் சிவப்பிரகாசத் திருப்பாட்டாகும்.
"ஆறு சமயத்தும்" எனத் தொடங்கும் செய்யுட்குக் கருவாய் அமைந்தது "அறுவகைச் சமயத்தோர்க்கும்" எனத் தொடங்கும்