தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxviii

சிவஞான சித்தியாரின் மங்கல வாழ்த்துத் திருப்பாட்டாகும்.

     "அவ்வுயிர்போல் எவ்வுயிரும்" எனத் தொடங்கும் செய்யுட்கு "அவையே தானே யாயிரு வினையின்" எனத் தொடங்கும் சிவஞான போதத்து இரண்டாம் நூற்பா கருவாயமைந்தது. அகர வுயிரியின் விளக்கம் பக்கம் 54-56 காண்க. திருவள்ளுவ நாயனாரருளிய செந்தமிழ்ப் பொதுமறையின் சிறப்பு வருமாறு:

 
மன்னுசிவ வாழ்க்கைவழி பாடு வரம்பிலின்பம்
 
மன்னுதமிழ் நூன்மூன்றாம் வள்ளுவனார் - சொன்னமறை
 
நால்வர்முறை மெய்கண்டார் நாட்டுதமிழ் நன்றூட்டும்
 
ஆலமர்வோன் தாளின்பருள் அன்பு.
     வாழ்க்கை நூல்: ஆலமர்வோன் அருளிய அன்பியல் நூல்; வழிபாட்டு நூல்; அவனருளிய அருளியல் நூல். வரம்பிலின்ப நூல்: அவன் அருளிய அடியியல் நூல். இஃதெதிர் நிரனிறை.

     "நாம் பிரமம்" எனத் தொடங்கும் செய்யுட்கு "நானவனென் றெண்ணினர்க்கு" எனத் தொடங்கும் சிவஞான போதத் திருவெண்பா கருவாயமைந்தது. "அஞ்செழுத்தி" எனத் தொடங்கும் செய்யுட்குக் கருவாய் அமைந்தது வருமாறு:

 
"அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
 
 அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும் - அஞ்செழுத்தே
 
 ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம்
 
 மோனந்த மாமுத்தி யும்."
 
- உண்மை விளக்கம், 44.
     சித்தாந்த சைவத்துத் தீக்கைப்பேறு மிகவும் சிறப்புடையதாகும். அதனை நம் தாயுமான அடிகள் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் ஓதுவாருள்ளத்து அழுந்தும் வண்ணம் அருளியுள்ளனர். அது வருமாறு:

 
"நலமேதும் அறியாத என்னைச் - சுத்த
 
    நாதந்த மோனமாம் நாட்டந்தந் தேசஞ்
 
 சலமேதும் இல்லாமல் எல்லாம் - வல்லான்
 
    தாளால்என் தலைமீது தாக்கினான் தோழி - சங்கர."
 
- தாயு. 54. ஆனந்தக்களிப்பு - 17.
     இதற்குக் கருவாய் அமைந்த திருமாமறை வருமாறு:

 
"தாடலைபோற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக்
 
 கூடலைநீ ஏகமெனக் கொள்."
 
- திருவருட்பயன், 74.