பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

8

சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு
    திவ்யதே சோமயத்தைச்
  சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர
    தேவதையை அஞ்சலிசெய்வாம்.
     (பொ - ள்.) அத்துவித . . . ஆதியை - (திருவருளோடு தொன்மையிலேயே) மெய்ப்புணர்ப்பாய் நிற்கும் பொய்யிலா மெய்ப்பொருளை, (மறைமொழி எனப்படும்) மந்திரமேனியாகக் கொண்டருளிய ஒன்றை, அருமை மிக்க நாற்பொருள் பயக்கும் பண்டை நான்மறைகள் பலரும் அறியுமாறு முழங்கா நிற்ப, சிற்றறிவாகிய உயிர்க்குள் முற்றறிவாகிப் பேரின்பப் பெருக்கே தன் வண்ணமாகிய ஆதியாற்றலை;

     அநாதியோக . . . . . வ்யோம நிலையை - பழைமையான இணையில்லாத ஒன்றான உண்மை வடிவை, மதத் தொடர்பினின்றும் அதற்கப்பாலாய்ப் பற்றுக்கோடாகிய ஆதாரம் இல்லாததான, நிலையானதும், நிறைவுள்ளதும், புகலிடம் வேண்டாததும் புகலிடமாயுள்ளதும், அமைதிநிலையாகியதும் ஆன அருட்பெரு வெளியை;

     நித்தநிர் . . . . . நிராமயத்தை - தொன்மையாகவே இயல்பாகப் பாசங்களினின்று நீங்கிய இயல்புடன் கூடிய உலகிறந்த ஒண்பொருளை, நுகர் பொருள்களாகிய புலன்களில் (விடயங்களில்) பற்றுகள் சிறிதும் இல்லாததாய்த் தூய்தாய் யாதொன்றின் வயத்தும் தானெய்தாமல் யாவும் தன் வயத்தனவாயுள்ளதை, இஃதெனவும், அஃதெனவும், இஃதன்றெனவும், அஃதன்றெனவும் நில முதலிய கருவிகளாயும், அவையல்லாததுமாகி நடுவாய் நின்று விளங்காநின்ற, இருளின்மையும், நோயின்மையும் ஒருங்கமைந்த தூய்மையை;

     சித்தமறி . . . . . அஞ்சலி செய்வாம் - கருத்தறியாத வகை கருத்தில் நின்று ஒளிர்கின்ற மேன்மையான பேரொளிப் பிழம்பினை, அறிவுப் பெருவெளிக்குள் முழுநிறை வடிவாகித் தானே விழுமிய முழு முதல்வனான (மக்கட்கும், தேவர்கட்கும், மூவர்க்கும், மற்றுள்ள அனைத்திற்கும் மேலான) தெய்வத்தைக் கைகூப்பி வணங்கல் செய்வாம்.

     (வி - ம்.) "வத்துவை, தனியை, ஆதியை, சொரூபத்தை, வ்யோம நிலையை, நிட்பிரபஞ்சப்பொருளை, நிர்விகாரத்தை, நிராமயத்தை, தேசோமயத்தை" அஞ்சலி செய்வாம் எனத் தனித்தனி கூட்டியு முரைத்துக்கொள்க.

     அத்துவிதம் - புணர்ப்பு; பின்னல். பிரகாசம் - ஒளி. ஆதி - தொடக்கம்; காரணம். அநாதி - தொன்மை; ஆதியல்லது. தத்துவம் - மெய்; அழியாப்பொருள். சாலம்பரகிதம் - ஆதாரமில்லாதது. சாசுவதம் - நிலையானது. புட்கலம் - நிறைவு. நிராலம்பம் - ஆதாரம் வேண்டாதது. ஆலம்பம் - புகலிடம். வ்யோமம் - வெளி. நிஷ் பிரபஞ்சப் பொருளை - உலகிறந்த ஒண்பொருளை. நிர்விசய சுத்தமான - நுகர் பொருள்களாகிய புலன்களில் பற்றுக்கள் சிறிதுமில்லாத. தடத்தம் - பொது; நீங்குநிலை. நிரஞ்சனம் - இருளின்மை; நிறைவு, நிராமயம் - நோயின்மை.