இறைவன் திருமுன் எல்லாம் நிகமும் இயல்பினால் இங்ஙனம் இறைசெயலே என்றுணர்த்தினர். எனினும் உண்மையான் நோக்குவார்க்கு தம்முனைப்பற்றுத் தாளிணை தலைமேற்கொண்டு சிவனுக்கு அடிமையாம் நற்றவம் எய்தினார் வாயிலாக நிகழும் செயல்மட்டுமே சிவன் செயலாகும். ஏனைய அவ்வவ்வுயிர்களின் செயலேயாம். மேய்ப்போன் மந்தையுடனும், பெற்றோர்கள் பிள்ளைகளுடனும், ஆசிரியர், மாணவருடனும், மேலாளர், அலுவலருடனும் விட்டு நீங்காது உடனாயிருப்பினும் நிகழும் செயல்களுக்குப் பொறுப்பாளி செயல்புரிந்தோரேயன்றி உடனாகவிருந்தோர் ரல்லர். இவ்வொப்பே இறைவன்பாலும் இயைத்துக் கொள்க.