பிரியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து | பேசரிய வாசியாலே | பேரின்ப உண்மையை அளித்தனைஎன் மனதறப் | பேரம்ப லக்கடவுளாய் | அறிவா யிருந்திடும் நாதவொலி காட்டியே | அமிர்தப்ர வாகசித்தி | அருளினைய லாதுதிரு அம்பலமு மாகிஎனை | ஆண்டனைபின் எய்திநெறியாய்க் | குறிதா னளித்தனைநன் மரவுரிகொ ளந்தணக் | கோலமாய் அசபாநலங் | கூறினபின் மௌனியாய்ச் சும்மா இருக்கநெறி | கூட்டினை எலாமிருக்கச் | சிறியேன் மயங்கிமிக அறிவின்மை யாவனோ | தேடரிய சத்தாகிஎன் | சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே | தேசோ மயானந்தமே. |