தாராது தள்ளவும் போகாது னாலது | தள்ளினும் போகேனியான் | தடையேது மில்லையாண் டவனடிமை யென்னுமிரு | தன்மையிலும் என்வழக்குத் | தீராது விடுவதிலை நவோன கடவுளே | தேடரிய சத்தாகிஎன் | சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே | தேசோ மயானந்தமே. |
(பொ - ள்) "ஆரா . . . மருவாது" - (பலநெறியும், பலநூலும் மேற்கொண்டொழுகும்) ஒவ்வொருவரும் அடியேனுக்கு (அவரவர் சமயங்களை யெடுத்து) எவ்வெவ்வாறு போதித்தாலும் அவற்றால் எளியேனுடைய உறுதியான அறிவினை மயக்க முடியுமோ! (முட்டைவடிவாயுள்ள உலகங்கள் அனைத்தும் அண்டங்கள் எனப்படும்.) எண்ணிறந்த அண்டகோடிகளெல்லாம் அடுக்கடுக்காக அமைத்து நீங்காது தங்குவதற்கு மாறாக இடமாகத் தெய்வக்கருவீடு என்று சொல்லப்படும் திருவருள் அறிவாற்றற் பெருவெளியில் எளியேனுடைய மனவெளி இயைந்து (அடங்கி அதன்வழி) நின்று விளக்கமுறுவதாகும். அங்ஙனமன்றி யாதொன்றிலும் அழிந்தொழியும் படி பொருந்துதல் செய்யாது;
"நன்னயத் . . . யான்" - நல்ல விருப்பத்தால் இனிமேல் திருவடிப்பேரின்பப் பேறாகிய வீட்டு நிலையும் தந்தருளாது தள்ளிவிடவும் முடியாது; நின்திருவருளால் அது தள்ளப்படினும் அடியேன் நின்னை விட்டுப்போகேன்;
"தடையேது . . . கடவுளே" - (இந்நிலைமைக்கு யாண்டும்) எவ்வகைத் தடையுமில்லை. நின்னை ஆண்டான் என்பதற்கும் எளியேனை அடிமை என்பதற்கும் குறிக்கப்படும் மெய்ப்புணர்ப்புத் தன்மையிலும் அடியேன் வழக்குத் தீர்ந்தொழியாது. அடியேனும் விட்டு விடுவதற்கில்லை. நீயோ நடுவு நிலைமை நீங்காத நற்பெருங் கடவுளாவை.
"தேடரிய . . . ஆனந்தமே" -
(வி - ம்.) பிறங்குவது - விளங்குவது. பின்னமுற - அழிய. தள்ளல் - விட்டு விடுதல்.
ஞாயிற்றின் ஒளியும் கண்ணொளியும் வேறறக் கலந்து உலகியற் புலன்களாகிய பொருள்களைக் கண்டின்புறும். காட்டும் ஞாயிற்றின் ஒளியும் காணும் கண்ணொளியும் வேறறக்கலந்து புணர்ப்புற்றுப் பிரிக்க முடியாதபடி ஒன்றென நிற்பினும் தாங்குவதும் தாங்கப்படுவதும் ஆகிய வியாபக வியாப்பியத்தன்மை யாண்டும் உளவாம்.
அதுவேபோல் ஆவியும் ஆண்டானும் மெய்ப்புணர்ப்பு நிலையில் பிரிக்கவொண்ணாதபடி இரண்டறக்கலந்து ஆண்டான் காட்டு