பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

24

ஒடுக்கிச் சிறிது இருத்தல் வேண்டும் என்று உன்னினால் அறியாமை உட்பகையாக வந்து, அடியேன் மனத்தில் நீங்காது குடிகொள்ளுகின்றதே;

     'மலமாயை . . . யோசிக்குதே மனது' - மலம் மாயை வினைகள் மீண்டும் வந்து அடியேனைப் பற்றுமோ எனவும், (அதுவாயிலாக) தொடர்வழக்காக அடுத்தடுத்துச் சொல்லரிய அல்லற்பிறவி நேர்ந்து விடுமோ எனவும் எளியேன் மனம் (துணுக்குற்று அஞ்சி) எண்ணுகின்றதே.

     'சிரத்தையெனும் . . . . . . அருள்செய்குவாய் - ஆகலான் சிரத்தை யென்று சொல்லப்படும் செந்தமிழ்த் திருமாமறை, திருமாமுறை எனப்படும் இறைவன் நூல்களின்கண் உறுதியான முழு நம்பிக்கையாகிய படைக்கலத்தையும் தந்தருளி, பிறவி வேர் அற்றுப் போம்படி, திருவடியுணர்வாகிய சிவஞான மெனப்படும் உள்ளத்துரனையும் தந்தருளி அடியேனை ஓம்பி யருள்வாயாக;

         'பார்க்குமிட . . . . . . . ணானந்தமே.'

     (வி - ம்.) சந்ததமும் - எக்காலமும். சற்று - சிறிது. தொடுவழக்காய் - தொடர்ந்த வழக்காய். சென்மம் - பிறப்பு. சிரத்தை - இறைவனூல் நம்பிக்கை. வாள் - படைக்கலம். மெய்ஞ்ஞானம் - சிவஞானம். தீரம் - உள்ளத்துரன்.

     ஆருயிர்கள் பண்டே புல்லிய மலப்பிணிப்பால் "காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டு" கிடந்தன. முதல்வன் அவ்வுயிர்கள்மாட்டு வைத்த பெருந் தண்ணளியால் மாயா காரிய உடம்புகளைக் கண்ணுதலால் படைத்துக் கொடுத்தருளினன். அருளிச் செயல்புரிய உடனின்று செலுத்தியு மருளினன். அதனால் அச் செயலானது துணையின்மெய்ம்மை நோக்குவார்க்குத் தாம் செய்வதுபோன்று உலகத்துக் காணப்படினும் தம்மைக் கொண்டு செய்வித்தருளிய முதல்வன் செயலென்னும் துணிவே உண்டாகும். இவ்வுண்மை வரும் திருமாமுறையானுணர்க:

"பொறிபுலன் கரணம் எல்லாம் புருடனால் அறிந்தான் மாவை
 அறிதரா அவையே போல ஆன்மாக்கள் அனைத்தும் எங்கும்
 செறிதருஞ் சிவன்ற னாலே அறிந்திடுஞ் சிவனைக் காணா
 அறிதருஞ் சிவனே எல்லாம் அறிந்தறி வித்தும் நிற்பன்."
- சிவஞானசித்தியார் நூற்பா - 5.
     மேலும் திருமாமறை முடிபின்கண் வருவதூஉங் காண்க :

"அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
 குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ
 இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
 நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே."
- 8. குழைத்தபத்து - 7.