பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

274
அமர்ந்து திகழ்வது மறையறம் விளக்கும் வைதிக மூர்ந்த முறைநூற் பொருள் உணர்த்தும் சிவனெறியாகிய நன்னெறி.

(10)
 
அந்தோஈ ததிசயமிச் சமயம் போலின்
    றறிஞரெல்லாம் நடுஅறிய அணிமா ஆதி1
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
    வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும்
இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
    இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லை
சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத்
    தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம்.
     "அந்தோவீ . . . திரிபவர்க்கும்" - ஆஆ இது நனிமிகு வியப்பாகும், இச் செந்நெறியாகிய சிவனெறிபோல், மெய்ம்மை யுணர்வு கைவந்த நல்லறிவின ரனைவரும் நடுநிலை வழாது உணருமிடத்து அணிமா எனப்படும் நுண்மைப்பேறு முதலாகிய எண்பேறுகளும் முறையே வந்து வந்து கூடி விளையாடி உழல்பவர்க்கும்,

     "பேசா . . . பேர்க்கும்" - வாய்வாளாமையாகிய மேலாம் மோன நிலையினைக் கைக்கொண்டொழுகும் பெருந்தவத்தோர்க்கும், மேலும் மேலும் வெவ்வேறாகிய வானுலகை யாளும் புரந்தரன் முதலாகிய இன்ப விழைவுமிக்க நலந்துய்க்கும் பேறு பெ.ற்ற தேவர்கட்கும்,

     "இதுவன்றி . . . மார்க்கம்" - இந்நன்னெறியாகிய சிவனெறி யன்றி நிலைத்த புகலிடம் எனப்படும் தாயகம் வேறு ஏதும் இல்லை; இல்லை. சந்தானம் முதலாகச் சொல்லப்படும் தேவுலகப் பொன்மரம் போன்று மாறாத் திருவருளை நேராகக் காட்டுதற்குப் பொருந்திய செம்மை நெறி இச் சிவனெறியே யாகும். இதுவே நன்னெறி எனப்படும் சன்மாாாக்கமாகும்.

     (வி - ம்.) அந்தோ: வியப்பிடைச் சொல். அதிசயம் - வியப்பு. சமயம் - நெறி. நடு - நடுவு நிலைமை. அணிமாவாதி: 1. நுண்மை 2. பருமை 3. விண்டன்மை 4. மென்மை 5. விரும்பியதெய்தல் 6. நிறைவுண்மை 7. ஆட்சியனாதல் 8. கவர்ச்சி என்பன. இவற்றை முறையே: அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் எனவுங் கூறுப.

     மோனம் என்பது ஞானவரம்பென மொழிவதால் அந்நிலை நிற்பார் பெருந்தவத்தோராவர். மோனத்தின் மெய்ம்மை காட்டுவார் 'பேசா மோனம்' என்றனர். பேசாமையாவது ஒருவர் உள்ளம் ஒன்றினை ஓரும் பொழுதும் உழைக்கும்பொழுதும், உள்கும் பொழுதும், உண்ணும்பொழுதும், மகிழும் பொழுதும், மருவுமின்பிலும் எவர்க்கேனும் பேச இயலுமோ? கூறுமின். எனவே, மூதறிவாகிய பதி ஞானம் நிறைந்த நற்றவத்தவரிவர் என்பதற்குச் சிறந்த அடையாளம் பேசாமையாகிய மோனத்தினைத் திருவருளால் மேற்கோடலேயாம்.

 
 1. 
அட்டமா சித்திகள்.' 3. 34 - 11.