பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

276
ஒவ்வொருவரும் தங்களுக்குள் சார்புபற்றி அமைத்துக்கொள்ளும் குழூஉக்குறி. இதனைப் "பல்குழு" என்று திருவள்ளுவ நாயனார் ஓதியருளினர். நன்னெறிக்கண் நாட்டப்படும் பொருள்கள் ஆறு. அவை வருமாறு :

"ஏகன் அனேகன் இருள்கருமம் மாயையிரண்
 டாகஇவை ஆறாதி யில்."
- திருவருட்பயன், 5
     இவையே 'உலகத்தாருண் டென்பது' என்று வள்ளுவரருளுகின்றார். அது வருமாறு :

"உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
 தலகையா வைக்கப் படும்."
- திருக்குறள், 850.
     எல்லாச் சமயவுண்மைகளும் செம்பொருட்டுணிவாம் சித்தாந்த சைவ நன்னெறிக்கண் படிமுறையாக வைத்துக் காட்டப்படும் உண்மை வருமாறு :

     தில்லைமன்று எனப்படுவது "சிற்பரவியோம"மாகும். இதுவே திருச்சிற்றம்பலம். இதனைத் திருமுறைகள் ஓதுங்கால் திருவருளால் முதலும் முடிவுமாகத் தொடங்கியும் முடித்தும் ஓதுவதே நன்னெறி மரபு. இவ்வுண்மை வருமாறு :

"பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகைமின்
    பிறங்குபேர் அம்பலம் மேரு
 வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர்
    வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
 அருமறை முதலில் நடுவினில் கடையில்
    அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த
 திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம் பலம்1 முன்
    திருஅணுக் கன்றிரு வாயில்"
- 12, தடுத்தாட் - 604.
     தில்லைமன்றின்கண் எல்லா நெறியும் வல்லவாறுளவென்பது பள்ளி வகுப்புப் போன்று வழிபடுவோர்தம் நிலையினை முப்பாலாகக் குறிக்கப்படும்; அவரனைவரும் தத்தம் இயல்புடன் வழிபடும் வாய்ப்புள என்பதாம். அவை: அருவம், அருவுருவம், உருவம் என முத்திறப்படும். இம் மூன்றும் அங்கண் காணப்படுவது பொன்னம்பல மருவம் பொற்றூண் அரு வுருவம், பின்னுருவம் கூத்தப் பிரான் என்னும் முறைமையாம். உருவ வழிபாட்டினர்க்குக் கூத்தப் பெருமானும், அருவுருவ வழிபாட்டினர்க்குப் பொற்றூண் எனப்படும் சிவக்கொழுந்தும், அருவ வழிபாட்டினர்க்குத் திருச்சிற்றம்பலமாகிய அறிவுப் பெரு வெளியுமாம். இம்மூன்றும் முறையே சீலத்தார், நோன்பினர், செறிவினர்

 
 1. 
'முல்லையங்கண்ணி'. 6. 5 - 9.