வன்னெஞ்சினும் வன்னெஞ்சமுடைய ஒருவர் வழிபட்ட வரலாறு வருமாறு :
செய்வினையே தெய்வமெனச் செப்பியும் தெய்வங்கொள்கை சிறிது மில்லாது இறுமாந்து திரியும் சைமினி முனிவர் கன்னெஞ்சக் கடையவராவர். அவர் திருத்த நீர் மூழ்குதற் பொருட்டுப் பதிநடையாய்ப் புறப்பட்டனர். புறப்பட்டுப் பல நாடுகளுஞ் சுற்றித் திருத்தில்லை வழியாக வந்தனர். வரும் பொழுது திடீரென மருட்கையாகிய வியப்பும் வாலறிவின் வண்ணமும், விழுமிய மேலாம்முதன்மையும் ஒருங்கமைந்த கூத்தப் ரெமானாரைக் காணும் பேறு பெற்றனர். பெற்ற மாத்திரத்து அவர்தம் கன்னெஞ்சம் எதிர்பாராதவகையில் உருகுவதாயிற்று. ஐயகோ! இதுகாறும் தெய்வமில்லை யென என்