பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

283
உயிரும் ஆகிய மூன்றனையும், நின்னுடையவை எனவும் நின்வயப் பட்டவை எனவும் ஏன்றுகொண் டிருந்தருளி வழிகள் ஆறனையும் விழியுற நோக்கியருளி (மாயாகாரியவிளைவாய் மருவிநிற்கும்) ஐம்புலன்களையும், (அவற்றிற்கு நிலைக்களமாயுள்ள) ஐம்பூதங்களையும், உட்கலனாகிய அந்தக்கரணங்களையும் சார்ந்துண்டாகும் அளவில் குணங்களைனைத்தும் "நீ அல்லை அல்லை எனவும், (அடியேன் தங்கியுள்ள) இவ்வுடலும் நீயல்லை, (தனித்த) அறிவு அறியாமைகளும் நீயல்லை."

     "யாதொன்று . . . யாம்" - (ஆனால்) "நீ யாதொரு பொருளைப் பற்றுவையோ அப்பொருளின் இயல்பாய் நின்று (அப் பொருளுமாகாது வேறுமாகாது அப் பொருட்பயன் நுகர்ந்து கொண்டிருக்கும் அழிவில் அறிவுப் பொருளாய் அதன்கண் செறிந்து நிற்கும் இயல்பன்றி) அதன் தொடர்பு உனக்கின்றிப் பளிங்கினை யொத்து விளக்க விளங்கும் அறிவுப் பொருளாவை" யாம் உன்னுடைய நற்செவ்வி கண்டு உண்மையுணர்த்தும் இயல்பினேம் (என்பதாம்).

     (வி - ம்.) "உடல் பொருள் ஆவி மூன்றும்" நம்முடைய வென்று எண்ணும் எண்ணம் மெய்ம்மையாகா. உடலும் பொருளும் ஆருயிர்களாகிய ஆவிக்கு ஆண்டான் அந்தண்மையால் காரணமாயையினின்று ஆக்கியளித்த உடைமைகளே. அவை ஆருயிர்கட்கு அவனால் கொடுத்தருளப்பட்ட இரவற் பொருள்களே. ஆவிதானும் அவ்வாண்டவனுக்கு நீங்கா அடிமையே. அடிமையெனவே தன்னுரிமை ஏதும் இன்மை பெறப்படும். உரிமை இன்மை என்பது செய்வன, செய்விப்பன, கொள்வன, கொடுப்பன, கொள்விப்பன, கொடுப்பிப்பன, உண்பன, உண்பிப்பன முதலிய அனைத்தும் அவன் நினைவுடன், தன்னடிமைநிலை தலைக்கொண்டு திருவருள்வழிச் சீர்பெற ஒழுகுதலாம். இவ்வுண்மை வருமாறு:

"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
 முன்னின்று கல்நின் றவர்"
-திருக்குறள், 771.
     படைகள் செய்யும் வாய்ப்பினை மன்னன் படைத்துக் கொடாவழி அப் படைகள் என்செயும்? அம் மக்கட்குப் படையென்னும் பெயர் தானும் வருதற்கின்று. அதுபோல் ஆருயிர்கட்கு ஆண்டவன் உடல், உறுப்பு, உலகம், உண்பொருள்களைப் படைத்தளியாவிடின் அவ்வுயிர்கள் என்செய்யும்? ஒன்றும் செய்யா என்பது தேற்றமாம். அதனால் தன்னையும் சேர்த்து உளமுவந்து ஒப்புவித்தலே கடப்பாடாம். அவ்வுண்மை வருமாறு:

"அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமுங்
 குன்றே யனையாய் யென்னையாட் கொண்டபோதேகொண்டிலையோ
 இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்டோண் முக்கண் எம்மாளே
 நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே."
- 8. குழைத்தபத்து - 7
         மேலும் அவை அவன் வழியே ஒழுகுவன எண்னும் உண்மை வருமாறு :