பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

293
ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை
    ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை
மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்
    வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
அருளுடைய பரமென்றோ அன்று தானே
    யானுளனென் றும்மெனக்கே ஆணவாதி
பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்
    பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே.
     (பொ - ள்) "ஒருவனவன் . . . நிற்பேன்" - வனத்திலுறை வாழ்க்கையினையுடைய ஒருவேடன், தான் கண்ட யானை மறைந்து விட்டமையை ஓராது காணவில்லையென்று கவலையுற்றுத் தேடத்தொடங்கினன்; வருந்துதலால் ஏற்பட்ட மயக்கத்தினால் (யானைபுகுதற்கு ஒரு சிறிதும் வாய்ப்பில்லாத இடமாகிய) குடத்தினுள்ளும் கைவிட்டுத்தேடித் துழாவுவன். அதுபோல் அறியாமைவயப்பட்ட அடியேன் (ஆருயிரும் பேருயிராகிய சிவனும் மெய்ப்புணர்ப்புற்று நிற்கும் நிலையில்) உப்பும் நீரும் கலந்த கலப்புப் போலவும், கருப்பூரமும் தீயுங் கலந்த கலப்புப் போலவும் நும் திருவடியிற் றிருவருளால் கலந்து நிற்கவும், பின்னும் புணர்ப்பாகிய ஐக்கியத்தினை நினைந்து வருந்தி நிற்கின்றேன்.

     "அருளுடைய . . . . . . பேசிற்றன்றே" - தன் திருநோக்கத் திருத் தொழிற்குத் துணைக்காரணமாகவும், தனக்குத் திருமேனியாகவும் யாண்டும் பிரிப்பின்றி நிற்கும் திருவருளையுடைய விழுமிய முழுமுதல்வன் என்றுளனோ! அன்றே அடிமையாகிய யானும் உளேன் எனவும், எளியேனுக்கே ஆணவம், மாயை, வினை முதலாகிய கட்டுகள் உளவெனவும், அருள் நூல்களாகிய தென்றமிழ்த் திருமாமறை திருமா முறைகள் விளங்க எடுத்து மொழிந்துள்ள மந்திரங்களே வாய்மையுறப் பேசிற்றன்றே. இவ்வுண்மைகள் எளியேங்களால் கட்டிப்பேசிய கற்பனைப் பொய்ம்மொழிகள் அல்லவே?

     (வி - ம்.) உடம்புடன் கூடிவாழும் செவ்வியுயிர் திருவருளால் திருவடிக்கீழ்த் தலைமறைவாம் மெய்ப்புணர்ப்புற்றாலும் "வேம்பு தின்ற புழுப்போலப் பண்டைப்பயிற்சிவயத்தால் இவ்வுடம் போடிருக்குங்கால் ஒரோவழி உணர்வு புறத்துச் செல்லும். அப்பொழுதும் இத்தகைய எண்ணங்கள் தோற்றுவது இயல்பு, வனவன் - வனத்துவாழும் வேடன்.

(29)
 
அன்றுமுதல் இன்றைவரைச் சனன கோடி
    அடைந்தடைந்திங் கியாதனையால் அழிந்த தல்லால்
இன்றைவரை முத்தியின்றே எடுத்த தேகம்
    எப்போதோ தெரியாதே இப்போ தேதான்