பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

294
துன்றுமனக் கவலைகெடப் புலைநா யேனைத்
    தொழும்புகொளச் சீகாழித் துரையே தூது
சென்றிடவே பொருளைவைத்த நாவ லோய்நஞ்
    சிவனப்பா என்ற அருட் செல்வத் தேவே.
     (பொ - ள்) 'அன்றுமுத . . . முத்தியின்றே" - அன்றெனப்படும் தொன்மைக்காலந்தொட்டு இந்நாள்வரை அடியேன் வினைக்கீடாகப் பிறந்து இறந்து உழலும் பிறப்பு நிலைக்கோ அளவில்லை; கூறப்புகுந்தால் அளவில்லாத கோடிக்கணக்கான பிறப்பு என்று கூறலாம். இப் பிறப்புகளில் எல்லாம் அடியேன் அடைந்த யாதனையாகிய அளவில்லாத பெருந் துன்பத்தால் அழிந்ததல்லாமல் இந்நாள் வரையும் அடியேன் வீடுபேறாகிய சிறப்புப் பெற்றதின்றே.

     "எடுத்த . . . தேவே" - அடியேன் இருவினைக் கீடாக எடுத்த இவ்வுடம்பு கூத்தன் புறப்பட்ட கூடாய் நிலத்தே விழுந்தொழிவ தெப்போ தென்றறியேன்: இப்போதே விழுந்தாலும் விழலாம் என வந்து பொருந்தும் மனக்கவலையால் நொந்தழிவேன்; அக் கவலை நீங்குமாறு (புலாலுடம்பிற் கட்டுண்டு அவ்வுடம்பினையே மிக விழையும்) புலைநாயேனைத் திருத்தொண்டு புரியமாறு திருவாணை தந்தருளச் சீகாழித்துரையாகிய ஞானசம்பந்தரே! பரவை நாய்ச்சியார் பரல் பானாளிரவில் தூது செல்லுமாறு விடுத்த நம்பிஆரூரரே! நம் முதல்வனாகிய சிவபெருமானலேயே அப்பா என்றழைக்கப்பட்ட நாவரசரே! (வந்தருள்வீராக.)

     (வி - ம்.) சீகாழித்திருப்பதி சோழநாட்டின்கண் காவிரிக்கு வடகரையிலுள்ள திருவூர்கள் அறுபான் மூன்றனுள் ஒன்றாகும். காளமாகிய நஞ்சினையுடைய காளி யென்னும் பாம்பு பூசனை புரிந்தமையால் இத்திருவூர்க்குக் காளி யென்னும் பெயர் வந்த தென்ப. அது காழியெனத்திரிந்த தென்ப.

     நம்பியாரூரர் நாயனாரைத் தூது விட்டமெய்ம்மை வருமாறு:
"தீதுகொள் வினைக்கு வாரோம்
    செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
 காதுகொள் குழைகள் வீசும்
    கதிர்நில விருள்கால் சீப்ப
 மாதுகொள் புலவ நீக்க
    மனையிடை இருகால் செல்லத்
 தூதுகொள் பவராம் நம்மைத்
    தொழும்புகொண் டுரிமை கொள்வார்."
- 12 - ஆனாயர் - 42.
     நாவரசர் பெருமானார்க்கு அப்பர் என்னும் பொயருண்மை வருமாறு: