"குறைவு நிறை . . . . . . வருமே" - கூடுதலு குறைதலும் இல்லாமல் விடிகின்ற காலைப்பொழுது போன்று திருவருளின் தோற்றம் தோய்ந்துள்ள திருவடியுணர்வு கைவந்த வித்தகராகிய மெய்யடியார்களுடன் கூடி மெய்யின்பம் எய்துதலுமாகும். நிலவுலகமுழுவதும், விண்ணுலகம் முழுவதும் ஒருவர் வலியக் கொண்டுவந்து தந்தாலும் சிறிதுங் களிப்படையும் நிலையில்லாத பாலர், பித்தர், பசாசர்கட்கு1 உண்டாகும் குணங்களும் வந்து பொருந்தும்.
(வி - ம்.) திருவடியுணர்வு கைவந்த பெருந்தவத்தோர் திருவருள் வழிநின்று செந்நெறியொழுகித் தம்மை மறந்து செம்மைச்சிவனை நினைந்து நீங்காப் பேரின்பமுடன் வாழ்வர். இவர்கட்கு ஒப்பாகப் பாலர், பித்தர், பசாசர் பண்புகள் உளவாம்.
பாலர்பண்பு பசித்த பொழுதுண்பது; மேலுண்டற்குரிய பொருள் வேண்டுமென்று தேடாமலிருப்பது; பெற்றோர்க்கு வரும் பேற்றினால் தாமகிழ்தலும், இழப்பினால் தாம் வருந்துதலும் எய்தாதிருத்தல்; எந்தவிருப்பமுமின்றித் தொழில்புரிதல்.
பித்தர்பண்பு : வைதாரையும் வாழ்த்தினரையும் பகுத்து நோக்காதிருத்தல்; தம்முடம்பிற்கு வேண்டும் நலங்களையும் விரும்பாதிருத்தல்.
பேய்கோட்பட்டார் பண்பு: பேய்பிடியுண்டவர் உடம்பிலே காணப்படும் செயல்களும் சொற்களும் அப் பேயின்பொறுப்பாவதன்றி அவர் பொறுப்பாவதில்லை.
இம் மூன்று நிலையும் ஒருபுடையொப்பாக முறையே அருள்வழி நிற்றல், அகமகற்றில, மெய்ப்பொருட்கு அடிமையாய்ப் பொய்யா தொழுகுதல் என்பனவாகும்.
(7)
வரும்போமென் பனவுமின்றி யென்றுமொரு படித்தாய் | வானாதி தத்துவத்தை வளைந்தருந்தி வெளியாம் | இரும்போகல் லோமரமோ என்னும்நெஞ்சைக் கனல்மேல் | இட்டமெழு காவுருக்கும் இன்பவெள்ள மாகிக் | கரும்போகண் டோசீனி சருக்கரையோ தேனோ | கனியமிர்தோ எனருசிக்குங் கருத்தவிழ்ந்தோ ருணர்வார் | அரும்போநன் மணங்காட்டுங் காமரசங் கன்னி | அறிவாளோ அபக்குவர்க்கோ அந்நலந்தான் விளங்கும். |
(பொ - ள்) "வரும்போமென் . . . . . நெஞ்சை" - வருதலும் போதலும் ஆகிய தன்மைகளை யுடைய தென்று சொல்லுவதற் கிடமில்லாமல் எந்நாளிலும் ஒரு படித்தாய் வான்முதலாகிய மெய்கள் எனப்படும் தத்துவங்களையும் தன்னுள் அடக்கித் தான் மேலாக
1. | 'ஞாலமதில்'. சிவஞானசித்தியார். 8. 2 - 22. |