காட்சி - தெரிசனம். போக்கு - புகல். புந்தி - மனம். கிலேசம் - வருத்தம். பரம் - பொறுப்பு. ஆக்கம் - திருவடிச் செல்வம். மூர்த்தி - வடிவினன்.
(பொ - ள்) அழியாப் பேரின்பமே அடைக்கலமென்னத் தெரியவும், எளியேனுக்குப் பேரின்பப் பெருவாயிலாம் உரையற்ற மோனத்தை அருளிச் செய்த முறைமையிலே அடையவும் மூன்று திருக்கண்களையுடைய எம் தலைவன் (உணர்வினுக்குணர்வாய் நின்று) ஈந்தருளிய திருவருட்டிருக்குறிப்பினால், ஒன்றுக்கும் பற்றாத ஏழையேன் வழியாக நிகழும் செய்கை (எழுதுகோலின் செய்கை எழுதுவோன் செய்கை போன்று) திருவருட் செய்கையேயாம்.
(58)
கையி னால்தொழு தேத்திக் கசிந்துளம் | மெய்யி னாலுனைக் காண விரும்பினேன் |