ஐய னேஅர சேஅரு ளேயருள் | தைய லோர்புறம் வாழ்சக நாதனே. |
(பொ - ள்) அகம்புறம் நீங்கா அருட்பெருந்தலைவனே! அந்தண் வேந்தனே! பேரருட் பெருமானே! அருள்வடிவாம் உலகன்னையினை இடப்பாகங் கொண்டு நடமிகப் புரிந்து திடமுற வாழ்விக்க வாழும் உலக முதல்வனே! (நின் திருவடியினை) திருவருளால் அடியேன் கையினால் தொழவும், வாயினால் வாழ்த்தவும், உள்ளத்தினால் கசிந்துருகவும், மெய்யன்பினால் உன் மெய்ம்மையினைக் கண்டு தொழவும் விரும்பினேன்.
(வி - ம்.) சகம் - உலகம். மெய் - மெய்யன்பு. தையல் - பெண். பெண்ணொரு கூறனாம் பெருவடிவு வருமாறு :
| "வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே |
| கலந்தான் வலநீ றிடஞ்சாந் தெரிவலம் பந்திடமென் |
| பலந்தார் வலமிட மாடகம் வேல்வல மாழியிடஞ் |
| சலந்தாழ் சடைவலந் தண்ணங் குழலிடஞ் சங்கரற்கே."1 |
| -11. சேரமான், பொன்வண் - 45. |
(59)
சகத்தின் வாழ்வைச் சதமென எண்ணியே | மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன் | அகத்து ளாரமு தாமைய நின்முத்திச் | சுகத்தில் நான் வந்து தோய்வதெக் காலமோ. |
(பொ - ள்) (ஆணவ மலச்சார்பினால் மயக்குந் தன்மை வாய்ந்த மாயாகாரியமாயுள்ள) இவ்வுலக வாழ்வினைத் தோன்றியொடுங்குந் தன்மையதென் றெண்ணாது எளியேன் மயக்கத்தால் அழியாது நிலைபேறுடையதென்றெண்ணி, மிகுந்த தீமைப் பயன் விளையும் கொடுமைகளையே விடாது செய்து வருகின்றேன்; உயிர்க்குயிராய் அகமாம் உணர்வின்கண் நிறைந்த அமிழ்தமாய்த் தலைவனாய் வீற்றிருந்தருளும் மேலோனே! நின் திருவடிப் பேற்றுப் பேரின்பத்தினைத் திருவருளால் அடியேன் வந்து மூழ்கித் துய்த்துக்கொண்டிருப்பது எந்த நாளோ?
(60)
கால மூன்றுங் கடந்தொளி ராநின்ற | சீல மேநின் திருவரு ளாலிந்த்ர | சால மாமிச் சகமென எண்ணிநின் | கோல நாடுத லென்று கொடியனே. |
(பொ - ள்) இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களையுங் கடந்து மிக்கு ஒளிர்கின்ற பேரொளிப் பண்பே! நின் திருவருளால்
1. | 'தோலுந்.' 8. திருக்கோத்தும்பி - 18. |