பிறப்பறுக்கும் பெற்றி வருமாறு :"பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே."- 10. 1498. (4) பரம்பர மாகிப் பக்குவம் பழுத்த பழவடி யார்க்கருள் பழுத்துச்சுரந்தினி திரங்குந் தானகற் பகமே சோதியே தொண்டனேன் நின்னைஇரந்துநெஞ் சுடைந்து கண்துயில் பெறாம லிருந்ததும் என்கணில் இருட்டைக்கரந்துநின் கண்ணால் துயில்பெறல் வேண்டிக் கருதினேன் கருத்திது தானே. (பொ - ள்) வழிவழியடிமையாகிச் செவ்விமுதிர்ந்த பழைய அடியவர்கட்குத் திருவருட்கனி கனிந்து தேன்சுரந்து இரங்கியளித் தருளும் கொடைமிக்க பொற்றருவே! பேரொளியே! நின் திருவடித் தொண்டனாகிய எளியேன், நின்னைப் பலகால் இரந்து (இரந்தது பெறாமையால்) நெஞ்சுடைந்து, கண் பொருந்தித் தூங்காமல் இருந்ததையும் நீ யறிகுவை: அடியேன் கண்ணில் மறைப்பினைச் செய்யும் ஆணவ வல்லிருளினை நீக்கி (நின் பேரின்பப் பெருவாழ்வினைத் தந்து) நின் திருவருட் கண்ணால் பேரின்புற்றுப் பெருகத் தங்குதல் வேண்டி எண்ணினேன். அடியேன் எண்ணம் இதுவாகும்.(5) கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்துங் காரணங் கண்டுசும் மாதான்வருத்தமற் றிருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதியின்மை தீர்ப்பார்ஒருத்தரார் உளப்பா டுணர்பவர் யாவர் உலகவர் பன்னெறி எனக்குப்பொருத்தமோ சொல்லாய் மௌனசற் குருவே போற்றிநின் பொன்னடிப் போதே. (பொ - ள்) அடியேன் அறிவுக்கு அறிவாய் உள்நின்று அடிகள் உணர்த்திவருங் காரணத்தைக் கண்டுவைத்தும் (யாதொன்றினும் முனைப்பின்றி நின்திருவருள் வழிநின்று) செயலற்று வாளாவிருந்து பேரின்பம் நுகராமல் வருந்தினேன். அடியனேனின் அறியாமையினைத் தீர்த்தருள்வாயாக. நின்னையன்றி இதனைத் தீர்க்கும் ஒருத்தர் வேறு யாருளர்? அடியேன் மனவருத்தத்தினை அதுபோல் அறிபவர் யாவர்? உலகோர் உணராது செல்லும் புன்னெறியாம் பன்னெறிகளும் அடியேனுக்குப் பொருந்துவதாமோ? சொல்லியருள்வாயாக.
"பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும் குறப்பெண் குவிமுலை கோமள வல்லி சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே."- 10. 1498.
பரம்பர மாகிப் பக்குவம் பழுத்த பழவடி யார்க்கருள் பழுத்துச்சுரந்தினி திரங்குந் தானகற் பகமே சோதியே தொண்டனேன் நின்னைஇரந்துநெஞ் சுடைந்து கண்துயில் பெறாம லிருந்ததும் என்கணில் இருட்டைக்கரந்துநின் கண்ணால் துயில்பெறல் வேண்டிக் கருதினேன் கருத்திது தானே.
கருத்தினுட் கருத்தாய் இருந்துநீ உணர்த்துங் காரணங் கண்டுசும் மாதான்வருத்தமற் றிருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதியின்மை தீர்ப்பார்ஒருத்தரார் உளப்பா டுணர்பவர் யாவர் உலகவர் பன்னெறி எனக்குப்பொருத்தமோ சொல்லாய் மௌனசற் குருவே போற்றிநின் பொன்னடிப் போதே.