பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

401
கண்டாரைக் கொல்லும் நஞ்சினையுண்டு, தேவர்கட்கு அமிழ்தம் நல்கியது மட்டுமன்றித் தான் சாவாதிருந்து தனக்கு அமிழ்தமாக்கியதும் நிலைப்பிப்பது நிலைத்திருப்பது அமிழ்தமாதலின், கண்டத்துறையுங் கருநஞ்சம் மாள்விக்கா துண்கண்டத் துற்றமிழ்தா மெய்ம்மை யோர்வார்க்கு நன்கு புலனாம். அஃதாவது அந்நஞ்தம் நிலைத்து அமிழ்தம் போலாயிற்றென்ப. நஞ்சினை நல்லமிர்தாவுண்டு, தில்லைத் திருச் சிற்றம்பலமாகிய பொன்மன்றின்கண்னே திருவருட் பெருவெளியில் அம்மை காணக் திருக்கூத்தியற்றி அனைத்துயிர்களையும் திருத்தொழில் ஐந்தினுக்குட்படுத்தி நடப்பித்தருளும் நன்னலம் நிறைந்த நாயனே! பொருளின் மெய்ம்மையினை அப்பொருள் உள்ளபோதே அருளால் உணர்ந்துய்தல் அறமும் அறிவுமாகும் என்க.

(31)
நானெனவும் நீயெனவும் இருதன்மை
    நாடாமல் நடுவே சும்மா
தானமரும் நிலையிதுவே சத்தியஞ்சத்
    தியமெனநீ தமிய னேற்கு
மோனகுரு வாகியுங்கை கட்டினையே
    திரும்பவுநான் முளைத்துத் தோன்றி
மானதமார்க் கம்புரிந்திங் கலைந்தேனே
    பரந்தேனே வஞ்ச னேனே.
    (பொ - ள்.) (ஆண்டான் அடிமையாம் அகப்பண்பில் இருபொருளும் முதன்மையெனக் கிளைத்து முனைப்பதற்கு ஏது ஏதுமின்றாம். அடிமரம் ஒன்றாய்க் கிளை பலவாய்க் காணப்படினும் கிளை அனைத்தும் அடிமரம் எனப் பெயர் பெறுதல் யாண்டும் இன்று. ஒருவனாம் ஒப்பில்லா ஆசானுள் மாணவர் பலரும் அடங்கிவிடுவர். அங்ஙனம் அடங்கிவிடுவதால் மாணவர் பயனிழந்து அழிந்துபட்டுப் போனார் என்பதின்று. அடங்கி ஒன்றாய் அளவிலாப் பயன் துய்க்கின்றார் என்பது கண்கூடு. அதுபோல்) ஆருயிர் தன்னை நானெனவும், உயிர்க்குயிராய் நிற்கும் பேருயிராம் சிவபெருமானை நீ யெனவும், தன்மையும் முன்னிலையுமாக வேறு நிற்கும் நிலையில் பேசுவது போன்று பேசாது, இரு தன்மையும் நாடாது நடுவாகிய பொதுநிலையில் பேச்சறுதியாகிய தான் சும்மாவிருக்கும் நிலையெனப்படும் மவுன நிலையே மேலான நிலை யென்று தான் இருந்துகாட்டி. இதுவே உண்மை, உண்மை என அடியேனுக்கு நீ மௌனகுருவாய் எழுந்தருளிவந்து உணர்வடையாளப் புணர்வு விரலின் திருக்கையால் காட்டியருளினையே; அங்ஙனமிருந்தும் மீண்டும் நான் என்னும் எண்ணம் முனைத்துத் தோன்றி மனம் போன வழியிலே விரும்பிச்சென்று அலைந்து திரிந்தேன்; எங்குமுழன்றேன்; அதனால் பெரும்பாவியானேன்.

     (வி - ம்.) நடுவாக - பொதுவாக, இரண்டிணை ஒன்றாக. அடிமையின் உண்மையான எண்ணம் தன்பால் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தலைவன் நிகழ்ச்சியே என்று தலைவனையே இடையறாது எண்ணிக் கொண்டிருப்பது. இது வருமாறு :

"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
 முன்னின்று கன்னின் றவர்."
- திருக்குறள், 771.
(32)